Tuesday, April 21, 2009

எங்கே போனது நம் எல்லோரின் பணம்?

தற்போதைய நிதி நெருக்கடியால் பண புழக்கம் திடீரென குறைந்ததை அடுத்து அனைவரின் மனதிலும் எழும் கேள்வி- இது வரை உலகில் இருந்த பணம் எல்லாம் எங்கே போனது? அவை எல்லாம் திடீரென மாயமான மர்மம் என்ன?.
இது பற்றி அறிய பணம் எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்யபடும் பணத்திற்க்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்குப் பிறகு gold convertibility என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே. பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கிறது.இதனால பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி, அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து, அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பலாக பணம் வெளியிடபடுவது "Money As Debt" என்று கூறபடும் பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன். அவை வெளியிட்டிருக்கும் பணத்தின் (M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன். இந்த பணம் Fractional Reserve System என்று கூறப்படும் முறையில் வங்கிகள் கடன் கொடுப்பதன் மூலம் பெருக்கப்பட்டு $39 ட்ரில்லியன் என்ற அளவில் உள்ளது. பணம் எவ்வாறு பெருக்கப்பட்டுள்ளது என்று கூர்ந்து கவனியுங்கள்.கடந்த பத்து வருடங்களாக நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கபடும் முதலீட்டு வங்கி (investment bank), ஹெட்ஜ் முதலீடு (Hedge funding) மற்றும் பிற வங்கி சாரா பொருளாதார அமைப்புகளின் (Non banking financial institutions) வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் கடன் மற்றும் எடுக்கும் ரிஸ்க்குக்கு இணையாக ஒரு பகுதியை வைப்பு தொகையாக வைக்க வேண்டியதில்லை. இவர்கள் எடுக்கும் ரிஸ்க் மிக அதிகமாக இருக்கும்.வங்கி பிறருக்கு கடனை கொடுக்கும் போது அதற்கான ரிஸ்க்கை நிழல் வங்கி அமைப்பு எடுத்து கொண்டு அந்த ரிஸ்குக்கான பணத்தை வங்கியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளும். இதனால் வங்கிகள் எந்தக் கவலையும் இல்லாமல் கடன் பெருபவரின் தரத்தை பற்றி கவலை படாமல் பெருமளவு கடன் கொடுக்க ஆரம்பிக்க தொடங்கினர்.இது போன்று குழபத்தை ஏற்படுத்தும் பல புது வகையான பொருளாதார ப் பொருட்கள் (Financial products) உருவாக்கப்பட்டன. இது கடன்களின் மொத்த மதிப்பை $62 ட்ரில்லியன் ஆக்கியது. மேற்கண்ட நிகழ்வுகளால் எளிமையான வரவுக்கு சம்பந்தம் இல்லாத கடன்களால் நிலம், பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு வளர்ச்சிக்குப் (growth) பதில் வீக்கமடைந்து (swelling) $290 ட்ரில்லியன்களானது.தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதை நிலைநிறுத்த மேலும் அதிகமாக முதலீடுகள் செய்கின்றனர். இதனால் மீண்டும் கட்டிடத்தின் அளவு தான் பெரிதாகிறது.
பிஷ்சரின் (Fisher) எளிமைப்படுத்தபட்ட கீழ் காணும் சமன்பாடு (equation) பொருளாதாரத்தின் அடிப்படையை விளக்குகிறது.
MV=PQ
M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு
V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது
P=ஒட்டு மொத்த முதலீடுகளின் மதிப்பு
Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.
ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல்பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.கீழே உள்ள படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிடப்பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.

பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.

மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.

இதே நிலை, அதாவது பணப் புழக்கம் அதிக அளவாகி, உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதைத் தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன்பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்கப்பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது.இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்கபட்டது.மேலே சொன்ன சமன்பாட்டில் (MV=PQ) உள்ளபடி ஒட்டு மொத்த பணத்தின் அளவு (M) அதிக பணம் அச்சிடப்பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும் (V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி (Q) அளவும் அந்தளவுக்கு உயரவில்லை.உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின் (P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்தப்பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது உண்டாகும் இழப்பே தற்போது ஏற்படும் இழப்புகள் எல்லாம். இந்த விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் இப்போது நட்டம் அடைவது இயற்கையானது தான். ஆனால் இந்த இழப்பை செயற்கையாக தடுக்க எடுக்கப்படும் முற்சியின் விளைவை இனி வரும் காலங்களில் காணலாம்.
- நன்றி - தட்ஸ் தமிழ் .காம் (21-04-09)

Saturday, April 18, 2009

18 ஆவது காதல்.

Mr . புவனேஷ் - ஜூனியர் விகடன் ஜாலி பக்கதிலிருந்து,

தூங்கி எழுந்து வந்த ரமேஷ் துண்டுடன் நிற்கும் விவேக்கை பார்த்து, "ஏண்டா காலங்காத்தால இப்படி மும்தாஜ் மாதிரி நிக்குற?" என்றான்.
"நம்ம ரூம் சாஜகான் என்னை இப்படி நிக்க வெச்சுட்டான்"
"ரூம் சாஜகான்? யாரு நம்ம பிரகாஷா?"
"என்ன நம்ம பிரகாஷ்? நீ அவன் கூட்டாளியா? ஊருக்குள்ள இப்படி சொன்ன நீ செத்த!!"
"ஏன் டா?"
"இன்னைக்கு சார் ப்ரொபோஸ் பண்ண போறார்... நான் ரெண்டு நாள் என் அத்தை வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்!!"
"ஹ ஹ ஹ .. இன்றுடன் ஒழிந்தான் துரோகி.."
"நண்பா.. பிரகாஷு.. இந்த முடிவ நீ மாத்திகாத.. நீ போய்டா இங்க எல்லாத்தையும் நான் பார்த்துகறேன்.. அப்புறம் போன வருஷம் செத்த எங்க தாத்தாவ கேட்டதா சொல்லு.." என்று குளித்துகொண்டிருபவனுக்கு கேட்கும் படி கத்தினான்.
"போங்க டா இவனுகளா.. சாய்ந்தரம் அவள நம்ம ரூமுக்கு கூட்டிட்டு வந்து, 'இனி இவனுக தான் உன் அண்ணன்கள்'னு உங்கள அறிமுகபடுத்துனா என்ன தருவீங்க ? "
"கவலையே படாத வீங்க வீங்க தருவோம்.."
"இது நடந்தா நான் தீ குளிக்கிறேன்.. ஆனா எந்த கட்சியும் என்ன சொந்தம் கொண்டாடாம பாத்துகோங்கடா?"
"தம்பி அரசியல் எல்லாம் வேண்டாம்.. நீ ஏன் தூண்டோட நிக்கற?"
"டேய் அவன் குளுசுட்டு வந்துடான் டா.. சரி குளிக்கலாம்னு போனேன்.. அதுக்குள்ள மறுபடியும் பூந்துட்டான்..காதல்னா சும்மாவா? இன்னைக்கு நீ குளிக்கலைன்னு யார் அழுதா? கிளம்பு கிளம்பு.. இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும்.."
"அரை மணி நேரமா? இன்னும் அஞ்சு நிமுசத்துல வரல, வெளி தாழ்பாள் போட்டுட்டு வெளிய போய்டுவேன்.. வந்தாச்சு டா.. காதலிக்க போகும் போது இம்ச பண்ணறது உங்கள விட்டா வேற ஆள் இல்ல டா.. என் காதலுக்கு நீங்க தான் வில்லன்.."
"ஹீரோ காதலுக்கு தான் வில்லன்.. காமெடியன் காதலுக்கு ஏது டா வில்லன்?" என்று சொல்லிய வாரே குளிக்க சென்றான் விவேக்!!
"நான் தான் வில்லன்.. பொண்ணோட அண்ணன்னு சொல்லி நீ என்னை அறிமுகம் செய்.. அடுத்த நிமுசம் உன்ன அடுச்சு கொல்லறேன்.. ஆன்டி-கிளைமாக்ஸ் .. நல்லா இருக்கா ? ஆன்டி கிளைமாக்ஸ், சித்தப்பா கிளைமாக்ஸ் னு மொக்க போடாம இந்த டிரஸ் நல்லா இருக்கானு பாத்து சொல்லு.."
"சரி நான் டீ சாப்பட போறேன்.. வரும் போது கிளம்பி போயிரு.."
"பதில் சொல்லு டா.."
"Bye Bye டா.." ரமேஷ் திரும்பி வரும்போது, வேற சட்டையை தேய்த்து கொண்டிருந்தான் பிரகாஷ்.. பின்னாடி குளித்து முடித்து ஈர துண்டுடன் கடுகடுவென நின்று கொண்டிருந்தான் விவேக்..
"டேய் நீ இன்னும் போகலையா?"
(பதில் சொல்லாமல்...) "இந்த சட்ட நல்லா இருக்கா?"
நீ முதல் போட்ட சட்டையே நல்லா இருந்துது.. அதை ஏன் மாத்தின?"
"டேய் நீ வேற சும்மா இரு.. திருப்பியும் மொதல இருந்து ஆரம்பிக்காத.. இது எட்டாவது சட்டை.. ஹி ஹி ஹி .."
"சிரிக்காத.. ஒரு சட்டையையும் ஒரு பேன்டையும் வேற பொசிக்கிட்டான்.."
"விடு காதலுக்கு ஒரு சட்ட தியாகம் செய்யட்டும்.."
"அவன் செய்யட்டும்.. சட்ட என்னுது.. பேன்ட் உன்னுது.."
"டேய்.. நீ அடங்கவே மாட்டியா?"
"டேய் நண்பனுக்காக ஒரு டிரஸ் தியாகம் செய்ய மாட்டீங்களா?" "நண்பனுக்காக செய்வோம் உனக்காக செய்ய மாட்டோம்""டேய் உன் காதலும் இப்படித்தான் பொசுங்கும்.. இதைத்தான் இந்த சம்பவம் காட்டுது.."
"நண்பா .. என்னோட டிரஸ் ஒன்னுமே பொசுங்களையே.. எனக்கு இது நல்ல சகுனம்.. உங்களுக்கு தான் கெட்ட சகுனம்..இந்த வியாக்கானம் எல்லாம் பேசு.. ஏதோ உண்மையான காதல்னா கூட பரவால.. நீ இப்படி ப்ரொபோஸ் பண்ண போறது இது பதினெட்டாவது தடவை.."
"ஏன் பதினெட்டாவது தடவை ப்ரொபோஸ் செஞ்சா உண்மை காதல் இல்லையா ?"
"பாரு பாரு.. ஒரே பொண்ணுக்கு பதினெட்டு தடவை ப்ரொபோஸ் செஞ்சா மாதிரி பேசறான்.."
"டேய்.. இது முன்னாடி மாதிரி இல்ல டா.. அப்போ எதோ நான் சின்ன பையன்.. இப்போ அப்படி இல்ல டா.."
"ஏன் டா போன வாரம் தான் கடைசியா ப்ரொபோஸ் செஞ்ச.. அதுக்குள்ள வளந்துட்டியா?"
"மச்சி கடைசியா ப்ரொபோஸ் செஞ்சு ஒரு வாரம் ஆச்சா டா? பாரேன் நாட்கள் எவ்வளவு சீக்கிரமா போகுதுன்னு.."
"பாரேன் ஒரு வாரம் ஆனதுக்கு பீல் பண்ணறான்.."
"டேய் உன்னோட பனிரெண்டாவது காதலியோட அண்ணன் ரவி இவளோட கிளாஸ் மேட்.. பாத்துக்கோ.."
"டேய் நீ ஏன் டா அவன் காதலிகளோட டீடைல்ஸ் collect பண்ணற?"
"டேய் நீ வேற, இன்னொரு தாட்டி இப்படி சொல்லாத.. அப்புறம் நம்ம சாஜகான் அவன் அழகான பொண்ணுங்கள தான் லவ் பண்ணறான்னு நினைப்பு வந்துரும். சீன் தாங்க முடியாது!!"
"டேய் காதல் அழக பாத்து வரது இல்ல டா!! மனச பாத்து வரது!!"
"மண்ணாங்கட்டி, பஸ் ஸ்டாப் ல இருந்து லுக் விட்டதுல எப்படி டா மனசு தெருஞ்சுது?"
"சரி உங்க கிட்ட பேசுனா இந்த லவ்வும் அவ்வளவு தான்!! நான் கிளம்பறேன்.. இவுனிங் பாக்கலாம்.."
"நீ உயிரோடா இருந்தா பாக்கலாம் டா.. அந்த பொண்ணோட அண்ணன் போலீஸ்.."
"நிஜமாவா சொல்லற ?" ஷூ போட்டு கொண்டிருந்த விவேக் ஷாக் ஆகி அருகில் வந்து கேட்டான்..
"ம்ம்"
"இத்தன நேரம் சொல்லவே இல்ல?"
"இவரு பெரிய பப்ளிக் பரோஸ் பிராசிகியூட்டர்.. குறுக்கு விசாரணை செய்யறார்.."
"நிஜம்டா.. நம்பு.."
"சரி டா.. நான் ப்ரொபோஸ் பண்ணறேன்.. ஒகே ஆச்சுனா இந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க.. இல்லைனா அந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க.."
"மாமியார் வீடு எல்லாம் வேண்டாம் டா.. டைரெக்ட்டா மார்ச்சுவரி வரட்டா?"
"ஏன் டா.. உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா??"
"நல்ல காதலுக்கு தான் டா நல்ல வார்த்த, நொள்ள காதலுக்கு இது போதும் போ!!"
(காரி உமிழ்ந்து பிரகாஷ் நெற்றியில் திலகமிடவது போல் செய்கை செய்து சொன்னான் ரமேஷ்!!)
"ஆல் த பெஸ்ட் டா!!"
**********போய் ஒரு ரெண்டு மணி நேரத்தில் திரும்பி வாந்தான் பிரகாஷ்.. முகத்தில் புன்னகையுடன்..
அவன் இவ்வளவு இளித்து நண்பர்கள் பாத்ததே இல்லை.. என்ன நடந்தது என்று எவ்வளவு கேட்டும் சொல்லவே இல்லை.. "டேய் நீயா இவ்வளவு அமைதியாய் இருக்க?" என்று கேட்டும் கூட பதில் சொல்லவே இல்ல.. மெலிதாய் ஒரு புன்னைகை மட்டும் உதிர்த்தான்.. அந்த புன்னகை அவன் சந்தோசத்தை நண்பர்களுக்கு உணர்த்தியது.. காதல் மௌனமும் கத்துக்கொடுக்கும் போல..(எங்க போறீங்க, கத முடியல முழுசா படியுங்க!!)
"ஏன் டா, காதல் செஞ்சா இப்படி ஆஃப் ஆகிடுவாங்களா?" "நமக்கு என்ன அத பத்தி தெரியும்?"
அடுத்த நாள்...ஆள் நடமாடும் சத்தம் கேட்டு எழுந்த விவேக், பிரகாஷ் -ஐ பார்த்து அதிர்ந்தான்.. அதிர்ச்சியுடன் ரமேஷை எழுப்பினான்.. ரமேஷும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்..
காலை ஆறு மணிக்கு பிரகாஷ் குளித்துவிட்டு, நீட்டாக அயன் செய்த டிரஸ் போட்டுகொண்டு.. பல் தேய்த்து கொண்டிருந்தான்!
பிரகாஷ் அதிர்ந்ததுக்கு கூடுதல் காரணம் அவன் புது சட்டை பொசுங்கி கிடந்தது.. முதலில் ரமேஷ் சுதாரித்து, "என்ன டா பண்ணற?"
"இல்ல டா, நேத்திக்கு நான் போகும்போது வித்யாவை பார்த்தேன் டா, ஒரு பிச்சகாரனுக்கு காசு போட்டா.."
"அதனால இன்னிக்கு நீ போய் பிச்சை எடுக்க போறியா?""ஏண்டா இப்படி வினோதமா ஏதேதோ செய்யரனு கேட்டா, எதேதோ சொல்லற?" "முழுசா கேளுங்கடா, பஸ் ஸ்டாண்ட் பக்கதுல இருக்குற பிள்ளையார் கோயில் வாசல் பிச்சகாரங்களுக்கு பிச்சை போட்டு, உள்ளே போனா.. நானும் பின்னாடியே போன்னேன்.. அவ சாமிய சுத்திவரதுகுள்ள குருக்கள் உள்ளே போய்ட்டார்.. அவ வந்து கூப்டும் அவரு வரல.. அவ கண்ண மூடி சாமி கும்பிடும்போது பக்கத்துல போய், அவளுக்கு குங்குமம் வெச்சேன்.. அவ கண்ண தொறந்து என்ன பாத்தா.. நான் அவள பாத்தேன்.. ரெண்டு பேர் மூஞ்சியும் கிட்டத்துல.. நான் அவ கண்ண பாத்தேன்.. அவ ஏன் கண்ண பாத்தா.. நான் மெதுவா ஐ லவ் யு னு சொன்னேன்.. அப்போ தான் டா அவ மனசுல இருக்கறத எந்த தயக்கமும் இல்லாம சொன்னா.." "என்னடா சொன்னா? ஓகே சொல்லிடாளா?""கோயிலுக்கு வரதும் தப்பு இல்ல, ப்ரொபோஸ் செய்யறதும் தப்பு இல்ல.. ஆனா இது எல்லாம் பல்ல தேய்ச்சுட்டு வந்து பண்ணுங்கன்னு சொன்னா டா..

பாரேன் நேத்திக்கு நிறைய தடவ குளுசேன், ஆனா பல்லு வெளக்க மறந்துட்டேன்.. Bad Luck டா.. நீங்களும் ப்ரொபோஸ் செய்யறதுக்கு முன்னாடி பல்லு தேய்ச்சுட்டு போங்க டா!!"

Tuesday, April 14, 2009

''எழுக! இளைஞர் சக்தி!'

Junior Vikatan 19/04/2009 issue article for your view,

'இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலத் தைத் தீர்மானிக்கப் போகிறார்கள்...' -- அரசியல்வாதிகள் அடிக்கடி உதிர்க்கிற ஒரு பஞ்ச் டயலாக் இது! என்னதான் அரசியல் தலைவர்கள் ஆசை காட்டினாலும், இளைஞர்கள் அரசியலை நோக்கி வருவது பெருமளவில் குறைந்துவிட்டது என்பதே உண்மை. இன்றைய இளைஞர்களுக்கு அரசியலை விடவும், தங்களுடைய எதிர்காலத்தின் மீதுதான் அதிக அக்கறை. அதனால்தான் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் சுமார் 24 சதவிகிதம் இளைஞர்கள்-- அதாவது, சுமார் 18 கோடி வாக்காளர்கள் இளைஞர்கள். அவர்கள் பெரும்பாலும் எந்தக் கட்சியையும் சாராதவர்களாக இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். இவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இவர்களுடைய வாக்குகளை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு கட்சியும் புதியபுதிய டெக்னிக்குகளைக் கையாண்டு வருகின்றன. அதில் ஒன்று இணையம். எல்.கே.அத்வானி முதல் நம்முடைய உள்ளூர் அரசியல் தலைவர்கள் வரை இன்று பலரும் இணை யத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை வசீகரிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் ஏதேதோ வாக்குறுதிகளை அளித்த போதிலும், இளைஞர்கள் அவர்களை நோக்கிப் போகாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான இந்திய சுதந்திரம் இளைஞர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அதிகரிக்கவே உதவியிருக்கிறது. நம்மு டைய நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்களும், தாம் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத காரணத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவை நல்ல கல்வி, கௌரவமான சம்பளத்துடன் கூடிய
வேலைவாய்ப்பு. இதை நம்முடைய ஆட்சியாளர்கள் உருவாக்கித் தருவார்கள் என்ற நம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்குக் கொஞ்சமும் கிடையாது.
நம் நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு போய் விடக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் அக்கறை காட்டவில்லை. உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்தியப் பொருளாதாரமும் ஆட்டம் கண்டிருக்கிறது. இதனால் பெருமளவிலான வேலை இழப்புகளை நம் நாடு சந்தித்து வருகிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே அலைந்து கொண்டிருக்கும் நிலையில், இருக்கிற வேலையும் பறிபோய்விடும் என்கிற அச்சுறுத்தல் வேறு இப்போது அதிகரித்திருக் கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கிய தகவல் தொழில் நுட்பத் துறை, இன்று கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்தத் துறை யில் வேலை பார்த்துவந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், வேலையை இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 75,000 பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையை இழக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. ஐ.டி. துறை, அது சார்ந்த பி.பி.ஓ. துறை ஆகியவற்றில்தான் இத்தகைய வேலை இழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும்போதே பெரியபெரிய ஐ.டி. நிறுவனங்கள் நேரடியாக வந்து கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்தி, தமக்கான ஆட்களை தேர்வு செய்துகொண்டு போன நிலை... இப்போது இல்லை. கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக்கூட இன்னும் வேலைக்கான உத்தரவு வந்து சேர வில்லை. வேலை கிடைத்துப் போனவர்களும், சரியான பிராஜெக்ட் இல்லாததால் வெறுமனே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள். பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பிளஸ்-டூ படித்ததும் முன்னணிக் கல்லூரி களில் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நன்கொடை கொடுத்தாவது தம்முடைய பிள்ளைகளை சேர்த்து விட்டால், அவர்கள் படித்து முடித்தவுடன் கைநிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தம்முடைய பிள்ளைகளை கடன் வாங்கிக் கல்லூரிகளில் படிக்கவைத்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இன்றைய பொருளாதாரச் சூழல் கடுமையான அடியைத் தந்திருக்கிறது. கடந்த 2008 மார்ச் மாதம் வரை பெங்களூருவில் இருக்கும் ஐ.டி. துறையில் ஐந்தரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதில் கால்வாசிப் பேர் ஆண்டுக்கு ஐந்து லட்சத்துக்கும் குறையாமல் சம்பளம் வாங்கி வந்தார்கள். அவர்களெல்லாம் இன்று தம்முடைய வேலை நீடிக்குமா... நீடிக்காதா... என்று தெரியாமல் மனம் கலங்கி நிற்கிறார்கள்.
ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. துறைகளில் நேரடியாக ஒருவர் வேலை செய் தால் அவரையட்டி சுமார் ஆறு பேராவது வேலைவாய்ப்பைப் பெற்றுவந்தார்கள். இதன்படி பார்த்தால், இப்போது ஏற்படும் ஒவ்வொரு வேலை இழப்பும் மறைமுகமாக மேலும் ஆறு பேருடைய வேலை இழப்புக்கு இட்டுச்செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஐ.டி. துறையையட்டி வளர்ந்து வந்த பிற துறைகள், குறிப்பாக ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் முதலான துறைகள் இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இது ஒரு விஷச்சுழலைப் போல இந்தியப் பொருளாதாரத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய மோசமான சூழலில்தான் இந்திய நாடாளு மன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இளைஞர்களிடம் சென்று 'இந்தத் தேர்தலில் உங்களுடைய பிரச்னையாக எதை முன்வைப்பீர்கள்?' என்று கேட்டால், வேலைவாய்ப்பைத்தான் முதலில் சொல்வார்கள். நல்ல கல்வி வேண்டும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கைச்சூழல் வேண்டும், நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும், ஊழலற்ற நிர்வாகம் வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பவைதான் இன்றைய இளைஞர்களின் முன்னுரிமைகளாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வழங்காத காரணத்தால்தான், இளைஞர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது.
இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்று இளைஞர்கள் எல்லோருமே ஒப்புக்கொள்கிறார்கள் என்ற போதிலும், அதை வழங்கக்கூடிய அரசியல் தலைமை இன்று இல்லை என்றும் அவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். அண்மையில் பி.பி.சி. நிறுவனம் இந்திய இளைஞர்கள் பங்குபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்தத் தேர்தல் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, பெரும்பாலான இளைஞர்கள் நம்முடைய பாதுகாப்புக் கொள்கை குறித்து அக்கறையோடு கருத்துகளைக் கூறினார்கள்.
''பாதுகாப்பு என்பது போலீஸ§ம், ராணுவமும் வழங்குகிற பாது காப்பு என்று மட்டும் அர்த்தமாகாது. பொருளாதாரப் பாதுகாப்பு மிக முக்கியமானது. அது வேலைப் பாதுகாப்போடு தொடர்பு கொண்டிருக்கிறது!'' என்று அவர்களில் சிலர் குறிப்பிட்டார்கள். இது முக்கியமான ஒரு கருத்தாகும்.
நம்முடைய அரசாங்கம் பாதுகாப்புக்கான செலவு என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஒதுக்கி வருகிறது. அந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கு தொகை இருந்தாலே... லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கௌரவமான வேலைவாய்ப்புகளை அளித்துவிட முடியும். ஆனால், நம்முடைய ஆட்சியாளர்கள் அதுபற்றி கவலைப்படுவதில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், பொருளாதாரப் பாதுகாப்புக்கும் இடையே உள்ள உறவை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
இந்தியாவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்தத் துறையில் தமிழகம் உருவாக்கியது. உலகப் புகழ்பெற்ற ஐ.டி. நிறுவனங்கள் பல தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்ததால், நம்முடைய இளைஞர்களுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. இதே சமயத்தில் இங்கே பெருகிவந்த பொறியியல் கல்லூரிகள் உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் நம்முடைய இளைஞர்கள் போட்டியிடுவதற்கு வழி அமைத்துத் தந்தன. ஆனால், இந்திய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தமிழக ஐ.டி. துறையிலும் எதிரொலித்து வருகிறது.
இன்று தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரசியல் கட்சிகள், தமிழக இளைஞர்கள் சந்தித்து வருகிற இந்த வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கலை எப்படித் தீர்க்கப்போகின்றன? இதற்கென குறிப்பான திட்டங்களை அவை உருவாக்கியுள்ளனவா? பொறியியல் கல்லூரிகள் ஏராளமாக இருக்கிற நிலையில், இங்கே படித்துப் பட்டம் பெறுகிற இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லவேண்டிய நிலை, ஏற்கெனவே இருந்து வந்தது. இப்படியான உள்நாட்டு குடிப்பெயர்வு காரணமாக, நம்முடைய மாநிலத்தின் மனிதவள ஆற்றலை நாம் இழந்து வந்தோம். அது மேலும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சூழலில், அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை நம்முடைய அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது!
நம்முடைய மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்களில் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் பேர்தான், வேலை பெறத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள் என்று ஏற்கெனவே சி.ஐ.ஐ. மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பொறியியல் கல்வியை சீர்படுத்தி, மாணவர்களின் தரத்தை அதிகரிக்கச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொறியியல் கல்வி இவ்வளவு மோசமாக இருப்பதற்கு, பொறியியல் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாததும் ஒரு முக்கியமான காரணமாகும். தற்போது ஐ.டி. துறையில் ஏற்பட்டுள்ள சரிவை ஒருவிதத்தில் சாதகமாக நாம் திருப்பிவிட முடியும். தகுதியான ஆசிரியர்களைப் பொறியியல் கல்லூரிகளுக்கு நியமிக்க இந்தச் சூழலை பயன்படுத்திக்கொள்ளலாம். நல்ல சம்பளம் வழங்க முன்வந்தால்... திறமையான இளைஞர்கள் ஆசிரியப் பணியை நோக்கி வருவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சுயநிதி பொறியியல் கல்லூரியினர் இதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களை நிர்ப்பந்தித்துத்தான் இதைச் செய்யவைக்க முடியும். அரசியல் கட்சிகள் நினைத்தால், இது சாத்தியம்தான்.
இளைஞர்கள் தமக்கான பிரச்னையை முன்வைத்து விவாதிப்பதற்குப் பொருத்தமான களம் எதுவும் தமிழகத்தில் இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. அப்படியான வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்களுடைய பிரச்னைகளை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. இந்த இடைவெளியை நிரப்புவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். அது போலவே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதுகுறித்த விழிப்பு உணர்வை பரவலான தளங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும். ஆனால், அப்படியான முயற்சி எதுவும் இதுவரை இங்கு நடைபெறவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
தமிழக இளைஞர்கள் தம்முடைய பிரச்னைகளை வெளியே சொல்லமுடியாமல் மனத்திலேயே போட்டுப் புழுங்கிக்கொண்டு தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கி நிற்பார்களேயானால், அது அவர்களுக்குத்தான் நட்டம். 'அரசியல் மோசம்... அரசியல்வாதிகளெல்லாம் மோசம்... எல்லா இடங்களிலும் ஊழல் நிறைந்து விட்டது...' என்று புலம்பிக்கொண்டிருப்பதால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. தமக்கான பிரச்னைகளை முன்னிறுத்தவும், அவற்றைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். 'இளைஞர்கள் எவரும் எங்களை அணுகவில்லை. எனவே, நாங்கள் என்ன செய்வது?' என்று சொல்லி அரசியல் கட்சிகள் தப்பித்துக்கொள்ள முடியாது. இளைஞர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை தராவிட்டால், இந்த அரசியல் கட்சிகள், இளைஞர்களின் ஆதரவை மட்டுமல்ல... மற்றவர்களின் ஆதரவையும்கூட பெறுவது சந்தேகம்தான்!

Thursday, April 9, 2009

பணநாயகம்... ஜனநாயகத்துக்கு சவால்!

junior vikatan issue 12-04-2009, intha நேரத்தில் yosikka வேண்டிய ஒரு விஷயம் ungalukkaga

தேர்தல் அறிக்கைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வெளியிட்டுவிட்டன. வேட்பாளர் பட்டியலும் பல கட்சிகளால் வெளியிடப்பட்டு விட்டன. இனிமேல் வாக்கு சேகரிக்கக் கிளம்ப வேண்டி யதுதான்.
கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், அவை அறிவித்திருக்கிற வேட்பாளர் பட்டியலையும் பார்க்கும்போது, அவற்றுக்கிடையே ஒரு முரண்பாடு இருப் பதை உணர முடிகிறது. தேர்தல் அறிக்கையில் பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் பேசி யிருக்கின்றன. தேசியக் கட்சிகளை எடுத்துக்கொண்டால், வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டு பாதுகாப்பு என்று ஏகப்பட்ட பிரச்னைகளை விவாதித்திருக்கின்றன. மாநிலக் கட்சிகளும்கூட தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்தில், பல்வேறு ஆழமான பிரச்னைகளை தேர்தல் அறிக்கை களில் வெளியிட்டு இருக்கின்றன. ஆனால், இந்தத் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பேசு வதற்கும், நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதங்களை திறமையாக முன்வைப்பதற்குமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால், அரசியல் கட்சிகள் வெளி யிட்டுள்ள வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால், அவர்களில் பலர் அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக் கையில் முன்வைத்துள்ள விஷயங்களைப் பற்றி எந்தளவுக்கு விவரம் அறிந்துள்ளனர் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஆக, தேர்தல் அறிக்கை என்பது வெற்று வாக்குறுதிதானோ என்ற ஐயம் வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.
வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, என்னென்ன விஷயங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதைப் பார்த்தாலே இதற்கான விடை நமக்குத் தெரியும். போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் நேர்காணல்களில் முக்கியமாக இடம்பெறுகின்ற கேள்வி, 'நீங்கள் எவ்வளவு கோடி செலவு செய்வீர்கள்?' என்பதுதான். ஒரு
window.google_render_ad();
நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிகபட்சமாக இருபத்தைந்து லட்ச ரூபாய்தான் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த போதிலும், பலகோடி ரூபாய்களை ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்கிறார் என்பது ஊரறிந்த ரகசியம்.
தேர்தல் செலவு என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்துகொண்டே போகிறது. முன்பெல்லாம் சட்ட மன்றத் தேர்தலுக்குத்தான் அதிகமாக செலவாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்படி செலவு செய்ய தேவையில்லை என்ற நிலை இருந்தது. இப்போது சிறிய கட்சிகள்கூட மத்திய அரசில் பங்குபெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், தேர்தலில் செய்யப்படும் செலவு பின்னாளில் ஈட்டப்போகும் வருமானத்துக்கான முதலீடாகக் கருதப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலும்கூட செலவு மிகுந்ததாக மாறிவிட்டது. மிக சாதாரணக் கணக்கின்படி தொகுதி ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் செல வாகும் என்றுதான் பொதுவான பேச்சு இருக்கிறது. ஆக, நம்முடைய 'ஜனநாயகம்' என்பது 'பணநாயகமாக' மாறிவிட்டது!
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு எத்தனையோ விதமான பற்றாக்குறைகள் ஏற்படும். இப்போது வேட்பாளர் பற்றாக்குறை இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் பலவும் அறிவித்து வருகின்ற வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும்போது,
நல்ல வேட்பாளர்கள் கிடைப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
நாடாளுமன்றம் என்பது கட்சிகள் தங்களுடைய பலத்தைக் காட்டுகிற இடமல்ல. அதுதான் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கிற அவையாகும். அங்குதான் நம்முடைய நாட்டின் அனைத்துக் கொள்கைகளையும் தீர்மானிக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. உள்நாட்டு, வெளியுறவு, பாதுகாப்பு தொடர்பான நிலைபாடுகளெல்லாம் அங்குதான் தீர்மானிக்கப்படுகின்றன.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அவைக்கு எப்படிப் பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் எந்தவொரு கவனமும் செலுத்துவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது. பல்வேறு விஷயங்களில் ஞானமும், அதுபற்றி விவாதிக்கக்கூடிய ஆற்றலும்கொண்ட பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம்தான் ஒரு கட்சி தன்னுடைய இருப்பை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த முடியும். வெறும் பலத்தால் எதையும் செய்துவிட முடியாது. அரசியல் அறிவோ, பல்வேறு விஷயங்கள் குறித்த அக்கறையோ இல்லாதவர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, அவர்கள் வெறுமனே கைத்தூக்கிகளாக மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு கட்சிக்கு எத்தகைய லாப-நஷ்டங்களை ஏற்படுத்துகிறது என்பதை விடவும், அத்தகைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிற மாநிலங்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பது மிகமிக அவசியமாகும்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்று நம்முடைய மாநிலம் சந்தித்து வருகின்ற பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பகிர்வு பிரச்னைகள்; மத்திய-மாநில உறவுகள் குறித்த சிக்கல்கள்; இனம் என்கின்ற விதத்தில் தமிழ் இனம் சந்தித்து வருகின்ற சிக்கல்கள் என ஏராளமான பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் நாடாளுமன்ற அவையில் எடுத்துவைத்து, இதற்கான தீர்வுகளைக் காணவேண்டிய கடமை இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்லப்போகும் எம்.பி-க்களுக்கு இருக் கிறது. அந்தக் கடமையை ஆற்றக்கூடிய தகுதியான நபர்களை அனுப்பினால் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்தை நாம் காப்பாற்ற முடியும்.
தமிழ்நாட்டின் நலன்களுக்காக வாதாடக்கூடிய தகுதி யான நபர்களைத் தேர்ந்தெடுப்பதே வாக்காளர்களின் பொறுப்புதான் என்றாலும், அதற்கான வாய்ப்பு அவர் களுக்கு வழங்கப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி. தம்முடைய தொகுதியில் நிறுத்தப்படுகிற வேட்பாளர்களில் இருந்துதான் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில் வாக்காளர்களின் தேர்வு மிகவும் வரையறுக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. எனவே, இதில் வாக்காளர்களை அதிகம் குறைசொல்ல முடியாது. வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் கவனமாக இருந்து, நல்ல வேட்பாளர்களை நிறுத்தாமல் போனால், வாக்காளர்கள் எதுவும் செய்வதற்கில்லை.
விவரமறிந்த, நாட்டின் மீது அக்கறைகொண்ட பலரும், அரசியல் என்றாலே ஒதுங்கிப் போகிற நிலைதான் இப்போது உள்ளது. இதற்குக் காரணம், அத்தகைய நபர்கள் இருந்து செயல்படக்கூடிய கட்சிகள் இல்லாமைதான். இப்படியான நபர்கள் சேர்ந்து செயல்படக்கூடிய வாய்ப்பை அரசியல் கட்சிகள் உருவாக்கித் தர தவறிவிட்டன என்பதே உண்மை. அப்படி தப்பித்தவறி எவரேனும் வந்தாலும்கூட, அவர்கள் இந்தக் கட்சிகளில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய நிலை இருப்பதில்லை. இதற்கு அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லாமல் போய்க்கொண்டிருப்பதே முக்கியமான காரணமாகப்படுகிறது.
ஒருவர் தன்னுடைய ஆற்றலை வெளிப் படுத்தி, ஒரு ஆளுமையாக பரிணமிப்பதற்கு ஏற்ற சூழல் எந்த அரசியல் கட்சியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் கட்சிகளில் நல்ல வேட்பாளருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள கோஷ்டிப் பூசல்கள் நிறைந்த அரசியல் சூழலில், நல்ல ஆளுமைகள் எந்தக் கட்சியிலும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படையான தகுதியாக ஒருவரிடம் உள்ள பணம்தான் கருதப்படுகிறது என்ற நிலையில், வேறு எந்தவித தகுதியையும் அவரிடம் எதிர்பார்ப்பது நியாயமல்ல. பணத்தை செலவு செய்து வெற்றி பெற்றுப்போகிற ஒரு வேட்பாளர், பணத்தைச் சம்பாதிப்பதில்தான் குறியாக இருப்பார். அவருக்கு மாநிலத்தின் நலனோ, இனத்தின் நலனோ இன்னும் சொல்லப்போனால், அவர் சார்ந்துள்ள கட்சியின் நலனோகூட முக்கியமாக இருக்காது. பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்கி வெற்றி பெற்றுப் போகிற ஒருவர், அதேபோல பணத்தால் வாங்கப்படக்கூடிய ஒரு பண்டமாகத்தான் இருப்பார். ஒருசில எம்.பி-க் களின் ஆதரவுகூட நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கக்கூடும் என்ற நிலையில், இப்படியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்குப் பயனளிக்கும் என்பதை அரசியல் கட்சிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதம் வந்தபோது, அதில் பெரும் பாலான மாநிலக் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிதாகும். கலந்துகொண்ட ஒன்றிரண்டு கட்சிகளும்கூட தம்முடைய கூட்டணி தலை மையின் நிலைப்பாட்டை வழிமொழிவதாகவே கருத்துத் தெரிவித்தன. இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், சுயமாக சிந்தித்து நல்லதொரு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு இதுபோன்ற விஷயங்களில் ஞானம் கொண்ட பிரதிநிதிகள் அவையில் இருக்கவேண்டும்.
இன்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகின்ற நிதிப் பகிர்வு குறைந்துகொண்டே போகிறது. அதுபற்றி மாநிலக் கட்சிகள் சார்பில் போகிற எம்.பி-க்கள் குரல் எழுப்புவதில்லை. தமிழ்நாட்டில் 'வாட்' வரி அமல்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களைக் குறித்துப் பேசக்கூடிய எம்.எல்.ஏ-க்கள் ஒருசிலர்தான் தமிழக சட்டப் பேரவையில் இருந் தார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் நிலை இதைவிட சிறந்ததாக இல்லை. தற்போதுள்ள பொருளாதாரச் சூழலை புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? பொருளாதார விஷயங்களில் பயிற்சி அற்றவர்கள் அவை யில் நிறைந்திருக்கும்போது, நிதிநிலை அறிக்கை மீது என்ன விவாதத்தை நடத்திட முடியும்?
நம்முடைய நாட்டின் வேளாண் துறை, சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால், வேளாண் துறையை சரிவில் இருந்து காப் பாற்றியாக வேண்டும். வேளாண் துறை சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து எவ்வளவு பேருக்கு ஆழமான புரிதல் இருக்கிறது? விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த அறிக்கையைப் புரிந்துகொள்ளக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இன்றைய நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்? அதுபோல இன்று மீனவ மக்களின் வாழ்க்கையையே சிக்கலுக்கு ஆளாக்கக்கூடிய 'கடற்கரையோர மேலாண்மை' திட்டத்தைப் பற்றிவிவாதித்து, மீனவர் களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு குரலெழுப் பக்கூடிய எம்.பி-க்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?
தகுதியான, மக்கள் நலனில் அக்கறைகொண்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அரசியல் கட்சிகளுக்கு ஏற்படப்போகும் நஷ்டத்தைவிடவும், ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டமே மிகவும் அதிகம். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு குறித்துக் கண்காணிக்கவும், கருத்துச் சொல்லவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, ஊடகங்களுக்கு இதில் அதிகம் பொறுப்பு இருக்கிறது. விழிப்பு உணர்வு கொண்ட சூழலை ஏற்படுத்துவதன் மூலமே இத்தகைய சீர்கேட்டைச் சரிப்படுத்த முடியும்.
'அவர்கள் கட்சி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது அவர்களுடைய உரிமை. இதில் நாம் தலையிட்டு எதுவும் செய்து விடமுடியாது' என்று நினைத்தால், அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் மக்கள்தான். ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறாமல் தடுப்பதற்கு விழிப்பு உணர்வு பெற்ற வாக்காளர்கள் முன்வர வேண்டும். தனி நபர்களாக இருந்து, இதை மாற்றிவிட முடியாது என்பது உண்மைதான். சமூக அக்கறைகொண்ட இயக்கங்களும், ஊடகங்களும் நினைத்தால் நிச்சயமாக இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். செய்வார்களா?

Sunday, April 5, 2009

Youthfull.vikadan ல வந்த ஒரு ஜாலி பேஜ் உங்களுக்காக ( by Vellor francis) :

எல்லாம் வடிவேலு சொல்லுற மாதிரி படிக்கவும்,

வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்..
நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."

ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"

கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."

ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."

ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."

விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."

வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"

தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"

சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"

அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"

மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"

மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"

லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."

பிரணாப் முகர்ஜி : "முடியல..."

திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."

சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"

கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."

ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"

விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"

மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"

Friday, April 3, 2009

இன்று ஒரு தகவல் - 1

அடுத்த மாதம் நடக்கும் தேர்தல் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி,


ஒரு வேட்பாளர் குற்றைந்தது இருபது வாகனம் வரை வைத்து இருக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி உண்டு, தொகுதிக்கு குறைத்தது 5 வேட்பாளர்கள் 543 தொகுதிகளில் 30 நாள் பிரச்சாரம் செய்யும்போது குறைத்தது 50 லிட்டர் பெட்ரோல் ஒரு நாளைக்கு போட வேண்டும் என்று வைத்துக்கொண்டால் மொத்தம் 8,14,50,000 லிட்டர் பெட்ரோல் தேவை. ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் எனில் மொத்தம் 407 கோடி ரூபாய் இதற்க்கு மட்டுமே செலவு ஆகிறது. இது ஒரு அனுமானிக்கப்பட்ட கணக்கு மட்டுமே. நிஜமாக 800 கோடிக்கும் அதிகமாக செலவு செய்வார்கள்.

செலவை விடுங்கள், அவர்கள் சம்பாரித்த கருப்பு பணம் செலவு செய்கிறார்கள், ஆனால் இதன் மூலம் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸ்யிடு பற்றி நினைத்தால் பயமாக இருக்கிறது.

Euro-3 Standard படி ஒரு கார் 150g/km CO2 குறைத்து வெளிஇட்டால் மொத்தம் 1,22,17,50,000 ton CO2 இந்த பூமி வாயு மடலத்தில் கலக்க பூக்கிறது இன்னும் ஒரு மாதத்தில். இந்த லட்சணத்தில் நமது அரசின் "Go Green" பிரச்சாரம் வேறு. ஒரு நாள் கூட மக்கள் pirachanigalai பற்றி பேசாத MP தேர்தெடுக்க நாம் இன்னும் ஒரு மோசமான உலகை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். இது இல்லாமல் இப்போது நமது பெரிய அரசியல் தலைவர்கள் அனைவரும் Helicopter பயன் படுத்தும் அளவுக்கு பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்.

தேர்தல் நேரத்தில் ஊழல், வன்முறை ஆகியவை தலையெடுத்துவிடக் கூடாது என்று விழிப்போடு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது பாராட்டுக்கு உரியதுதான். ஜனநாயகம் மாசு படாமல் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு நம்முடைய சுற்றுச்சூழல் மாசு படாமல் காக்கவேண்டியதும் அவசியம். இதை namathu தேர்தல் ஆணையமும், நம்முடைய அரசியல் தலைவர்களும் கருத்தில் கொள்வார்களா?

இங்கே சிந்திப்பதற்கு நமக்கு ஏதும் நேரம் இருந்தால் சற்று சிந்தியுங்கள் நண்பர்களே.

Thursday, April 2, 2009

''கூட்டணி பேச்சு முறிந்தது!'' (ஒரு கற்பனை பேட்டி...)

ஜூனியர் விகடன் ஒரு கற்பனை கலந்துரையாடல் :

சரத்குமார் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தொகுதிப் பங்கீட்டுக்காக நடத்திய பேச்சுவார்த்தை...
இல.கணேசன்: வாங்க, வாங்க... சரத்! என்ன தனியா வந்திருக்கீங்க? கூட கட்சி நிர்வாகிகள் வரலையா?
சரத்: ராதிகாதானே..? 'அரசி' ஷ¨ட்டிங் போயிருக்காங்க.
இல.கணேசன்: எங்க கட்சியில தொகுதிப் பங்கீட்டு விஷயமாப் பேச இருவர் கமிட்டி ஒண்ணை அமைச்சுருக்கோம். அதுல நானும் திருநாவுக்கரசரும் இருக்கோம்.
சரத் (மனசுக்குள்): எங்க கட்சியில இருக்குற ரெண்டு பேரும்தான் உங்களோட அடுத்தடுத்த கட்டமா பேசுவோம். அதுசரி... திருநாவுக்கரசர் எங்கேங்க..?இல.கணேசன்: அவரு வேற ஏதும் கட்சிகூடப் பேச முடியுமானு பார்க்கப் போயிருக்கார்!
சரத்: சரி, நேரா மேட்டருக்கு வருவோம்...
இல.கணேசன்: இருக்கிறது 40 தொகுதி. இதை எப்படி பிரிச்சுக்கறது?
சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துடுங்க. மீதி 38-ம் உங்க கட்சிக்கு!இல.கணேசன்: அய்... அய்! எங்களுக்கு 2 போதும். 38-ல் நீங்கதான் நிக்கணும்!
சரத்: அதெல்லாம் முடியாதுங்க. நீங்க பாட்டுக்கு ஸீட்டைக் கொடுத்துட்டுப் போயிடுவீங்க. அங்கே நிறுத்தறதுக்கு நாங்க எங்கே போய் ஆளைத் தேடுறது?இல.கணேசன்: (மெதுவாக) கரெக்டா, நாம் பேச வேண்டிய டயலாக்கை இவரு பேசறாரே... (உரக்க) அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ரெண்டு. மீதியெல்லாம் உங்களுக்குத்தான்!
சரத் (டென்ஷனாக): 'கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதிப் பங்கீட்டினால் முறிந்தது'னு பத்திரிகைக்காரங்களுக்குச் சொல்லிடுங்க. எங்களுக்குனு சுயமரியாதை இருக்குல்ல... யார் நாங்க எதிர்பார்க்கிற ஸீட் தர்றாங்களோ அவங்களோடதான் கூட்டணி! நான் வர்றேங்க!

Hai Friends

Hai Friends,

This my new blog and First Blog too.

In this i would like to add lot of latest discussions and third eye analysis, by me from others support.

Hope every one will provide a good support.

Thanks

Kathiravan