Wednesday, July 8, 2009
கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!
மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.
'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ''கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்'' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்க ளுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்...
''போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!'' என்று கோவில்பட்டியிலும்...
''உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள் ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும் ஒரு காலத் தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.
சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். ''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல்அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!
30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!
எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ''இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் 'நம் பின் னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன.
''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதி களாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?
''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதைஎல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?'' என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே?
இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தைவிட அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும் எஸ்.டி.சோமசுந்தரமும் பேசினார்களே! 'இந்தியா படை எடுக்க வேண்டும்', 'ஜெயவர்த்தனாவைத் தூக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக்கொடுத்தார்கள். புறநானூற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே சொன்னார், ''அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாகப் பேச வரவில்லை.''
பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந் தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ''மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும் வேண்டாத வீரமாகத் தெரிகிறது.
பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, 'சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங் கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பாஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, 'உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக் கூடாதா?'' என்றால், 'என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக்கழித்தீர்கள். ''போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது 'மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள்.
நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக் கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்!
இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?
''மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து.''
தமிழீழம் குறித்து உங்களது கருத்து என்ன?
''இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து தான் என் கருத்து''.
பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்?
''ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.''
உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? 'தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போலத் தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில் நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். எட்டுத் தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? 'நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களைத் தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என்று கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியாமல், உங்களைப் பிடித்து இழுத்தது எது? அல்லது யார்?
''நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடி யும்?'' என்று ஈழத் தந்தை செல்வாவிடம் இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக்கொண்டு, மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு கடைசிக் காலத் திலும் கருவறைப் போராட்டம் நடத்திய 'தமிழின அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூடப் பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறை யாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்க ளது ஆட்கள் மத்திய லகானைச் சுழற்றி வந்திருக்கிறார்கள். சோனியா உங்களைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். கேட்ட பதவிகள் கிடைக்கின்றன. மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில்தான் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என் றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணா வும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்குக் காட்டிக்கொடுக்கிறீர் கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவைத் தாரை வார்க்கும்போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும் 'விரும்பினால்தான் தண்ணீர் தருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது.
தெற்காசியாவின் அதிசயமாக பென்னி குக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப் பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. முதலமைச்சர் அச்சுதானந் தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையைக் கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமரப் பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரை முருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது.
''பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லூரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகைஈரமா கவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... அதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது...
ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?
அன்புடன்,
ஈர விறகாக இருக்க முடியாத,
அரசியல் அறியாத் தமிழன்!
(Aanada vikatan july 080709 issue)
Saturday, June 13, 2009
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி...
ஸ்டாலினைத் துணை முதல்வர் ஆக்கியதற்கும், தனது குடும்பத்தினரைப் பல்வேறு பதவிகளில் அமர்த்தியதற்கும் ஏற்கெனவே தங்களது குடும்பத்தினரை அரசியலில் புகுத்தி வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொண்டுள்ள தேவ கௌடா, முலாயம் சிங், சரத் பவார், லாலு பிரசாத் போன்ற இக்கால அரசியல் தலைவர்களை அவர் உதாரணம் காட்டியிருக்கலாம். ஆனால் பொது வாழ்வில் நேர்மையையும், தனிவாழ்வில் எளிமையையும், நிர்வாகத்தில் தூய்மையையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த ராஜாஜியின் பெயரை அவர் உபயோகித்திருக்க வேண்டியதில்லை.
சி.ஆர். நரசிம்மன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது 1952 முதல் 1962 வரை. 1952 தேர்தலின்போது ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, அரசியலிலிருந்து விலகி இருந்த காலம். அந்தத் தேர்தலில், ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கவர்னர் ஸ்ரீபிரகாசாவின் ஆலோசனையின் பெயரில் குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ராஜாஜியை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதுதான் சரித்திரம்.
அந்தக் காலகட்டத்தில் எம்.பி. டிக்கெட் பெறுவதற்கு கட்சி அலுவலகத்தில் மனு செய்து நேர்காணலில், ""உங்களால் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்?'' எனக் கேள்வி கேட்கப்பட்டு, பலர் சிபாரிசு செய்து அதன்பின் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் பெறும் நடைமுறை கிடையாது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் யார் நின்றால் அப்பகுதியின் பெரியவர்கள் மற்றும் காங்கிரஸôர் விரும்புவார்கள் என்ற தகவல்கள் தரப்பட்டு அதனால் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்துடன் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
1952 மற்றும் 1957-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு ராஜாஜியின் மகன் நரசிம்மனை கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராகத் தேர்வு செய்தது பெருந்தலைவர் காமராஜர்தான். ராஜாஜியுடன் கடுமையான உள்கட்சி கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர் காமராஜர் என்பது வேறு, கிருஷ்ணகிரி தொகுதிக்கு சரியான வேட்பாளர் தனி மனித நேர்மை, படிப்பறிவு ஆகியவை நிரம்பிய நரசிம்மன்தான் என்பது வேறு என்ற வகையில் உயரிய நடைமுறைகள் வழக்கத்திலிருந்த காலகட்டம் அது.
அதுமட்டுமன்றி, தந்தையும் மகனும் ஒரே வீட்டில் குடியிருந்தபோதும் அவர்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது அதைவிட சுவாரஸ்யமான விஷயம். 1959-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் சி.ஆர். நரசிம்மன் தனது வீட்டில் முன் அறையில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோது அவரது தந்தை ராஜாஜிக்கு ஒரு தந்தி வருகிறது. எம்.ஆர். மசானி, என்.ஜி. ரங்கா ஆகிய இருவரும் அனுப்பிய அந்தத் தந்தியில் தாங்கள் மறுநாள் சென்னை வர இருப்பதாகவும் அச்சமயம் ராஜாஜியை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நரசிம்மனுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள்.
அந்தத் தந்தியை வீட்டின் உள்ளே இருந்த தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணகிரி தொகுதிக்கு பணி நிமித்தம் நரசிம்மன் சென்றுவிடுகிறார். இரண்டு நாள்கள் கழித்து கிருஷ்ணகிரியில் பத்திரிகையைப் புரட்டியபோதுதான் நரசிம்மனுக்குப் புதிதாக சுதந்திரா கட்சி எனும் ஓர் அரசியல் கட்சியைத் தனது தந்தை ராஜாஜி உருவாக்கிய செய்தி தெரிய வருகிறது. அதாவது, ஒரே வீட்டில் குடியிருந்து வரும் தனது மகன் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர், எம்.பி. என்ற வகையில் காங்கிரûஸ எதிர்த்து கடுமையான அரசியலை நடத்தி வந்த தனது நடவடிக்கைகள் தெரிய வேண்டியதில்லை என்று ராஜாஜியும் கருதினார்.
நரசிம்மனும் சரி, சுதந்திரா கட்சியின் தலைவர்கள் சிலர் அவரை அக்கட்சிக்கு அழைத்தபோது மறுத்துவிட்டார். 1962-ம் ஆண்டில் அவர் அதே கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு திமுக வேட்பாளர் க. ராசாராமிடம் தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளரான ராஜாஜியின் மகன் எம்.பி. டிக்கெட் பெற்றது காமராஜரினால்தானே தவிர, அவரது தந்தையின் சிபாரிசால் அல்ல. ஆகவே, குடும்ப அரசியலுக்கு மேற்கோளாக ராஜாஜியை முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டி இருப்பது சரியல்ல.
அடுத்து, இன்னொரு சம்பவம். ராஜாஜியின் மற்றொரு மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி. இந்து பத்திரிகையின் உதவி ஆசிரியர் பணியில் இருந்தார். அப்பொழுதெல்லாம் இரவு பணி முடிந்து ரிக்ஷாவில்தான் அவர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் நள்ளிரவு ரிக்ஷா கிடைக்காததால் பொடி நடையாக, மாம்பலம் பசுல்லா சாலையிலுள்ள தங்கள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார் கிருஷ்ணசாமி.
மவுண்ட்ரோடில் இரவு ரோந்துப் பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரை நிறுத்தி விசாரித்து, சந்தேகத்தின் பேரில் அவரை மவுண்ட் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். வீட்டு விலாசத்தை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் இது முதல்வர் ராஜாஜியின் விலாசம் எனக் கூறி மேலதிகாரியிடம் விசாரிக்க, முதல்வர் மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி இந்து பத்திரிகை உதவி ஆசிரியர் எனும் உண்மை புலப்பட்டது.
சி.ஆர். கிருஷ்ணசாமி தன்னை "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்று சொல்லிக் கொண்டாரே தவிர, முதல்வரின் மகன் என்று குறிப்பிடவே இல்லை. அந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏன் முதலிலேயே அந்த உண்மையைக் கூறவில்லை என்று கேட்டபோது, சி.ஆர். கிருஷ்ணசாமி சொன்ன பதில்~ "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்கிற பதவி நிரந்தரமானது. கௌரவமானது. முதல்வரின் மகன் என்பது அப்படியில்லை!'.
சப் இன்ஸ்பெக்டருக்கும், கான்ஸ்டபிளுக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கி விட்டோமோ என்று கருதினர். கிருஷ்ணசாமி மறுத்தும், விடாப்பிடியாக அவரை போலீஸ் ஜீப்பில் முதல்வரின் வீடு வரை கொண்டு போய் விட்டு விட்டு வந்தார் சப்-இன்ஸ்பெக்டர். மாடியில் விழித்திருந்து படித்துக் கொண்டிருந்த முதல்வர் ஜன்னல் வழியே ஒரு போலீஸ் ஜீப்பில் தனது மகன் வந்திறங்கியதைப் பார்த்திருக்கிறார். காலையில் முன்னிரவில் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டு தலைமைச் செயலகம் சென்ற பின் போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து போலீஸ் வாகனத்தை உபயோகிக்க உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என கேட்டிருக்கிறார்.
சந்தேகக் கேஸில் ஸ்டேஷனுக்குப் பிடித்துக் கொண்டு வரப்படும் குற்றவாளி தரத்திலானவர்களை லாக்கப்பில் தள்ளுவதும், தவறாகக் கொண்டு வரப்படும் கண்ணியமானவர்களை நடுநிசியில் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு போலீஸ் ஜீப்பில் கொண்டு போய் விடுவதும் வழக்கத்திலிருக்கும் நடைமுறையே என முதல்வருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
கொள்கை ரீதியாக ராஜாஜியுடன் கடுமையாக மோதிய பெரியார், காமராஜர் போன்றவர்கள்கூட அவரது நேர்மையையும், தன்னலமற்ற பொது வாழ்க்கையையும் சந்தேகித்ததும் இல்லை, குறை கூறியதும் இல்லை. ராஜாஜியின், நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதுதான் முதல்வர் கருணாநிதியின் நோக்கமாக இருக்கும் போலிருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராயிருந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் அப்துல் மஜீத், அவர் ஒருமுறை அலுவல் நிமித்தம் விருதுநகர் சென்றபோது, காமராஜரின் இல்லத்திற்கு சென்று அன்னை சிவகாமி அம்மையாரை சந்தித்திருக்கிறார். அச்சமயம், காமராஜரின் சகோதரி தண்ணீர்க் குடத்துடன் வந்திருக்கிறார். அமைச்சர் உங்கள் வீட்டிற்கு தனியாக குடிதண்ணீர் இணைப்பு கிடையாதா எனக் கேட்க, இல்லை என்ற பதில் வந்துள்ளது.
அன்றைய நிலையில் தனி வீடுகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு இல்லாமல் எல்லாருமே பொதுக் குழாய்களில் தெருக்களில் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் நடைமுறையே இருந்தது. விருதுநகர் நகராட்சியில் நிர்வாக ஆய்வு செய்த அமைச்சர், ஆணையரை அழைத்து முதல்வர் காமராஜரின் வீட்டிற்கு ஒரு தனி குடிதண்ணீர் இணைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அடுத்த முறை விருதுநகர் சென்ற காமராஜர் தனது வீட்டிற்கு குடிதண்ணீர் இணைப்பு தரப்பட்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தார். விவரங்களைக் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய பின் மஜீத்தை அழைத்து, ""நீங்களே விதியை மீறி ஒரு குடிதண்ணீர் இணைப்பை எங்கள் வீட்டுக்குக் கொடுக்கச் சொன்னது, அதிகாரிகள் இனிமேல் தங்கள் இஷ்டத்திற்கு பல வீடுகளுக்கும் ஹோட்டல்களுக்கும் இணைப்பு கொடுக்க வழிவகுக்கும். இதனால் ஊழலும், தண்ணீர் தட்டுப்பாடும் உண்டாகும். நீங்களே அந்த இணைப்பை அகற்றிவிடச் சொல்லுங்கள்'' எனக் கூறினாராம்.
இதுபோன்று தன்னலமில்லா பொதுத் தொண்டு செய்யும் அரசியல் தலைவர்கள் நம்மிடையே வாழ்ந்த காலம் மாறி தான் தன் குடும்பம் என சுயநலத்தோடு அரசியல் நடத்தும் தலைவர்கள் நாடெங்கிலும் பெருகிவிட்டனர். தியாகத் தலைவர்கள் பற்றி இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும்வகையில் முழுவிவரங்களையும் தெரிவிக்காவிட்டாலும் அவர்களைப் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் அரைகுறை தகவலை மட்டும் எடுத்துரைப்பது சரியல்ல!
சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் அப்பழுக்கில்லாத பழைய தலைவர்களை உதாரணம் காட்டுவதன் மூலம் தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயலும் முதல்வரின் முயற்சிகள் ஏற்புடையதல்ல. இன்றைய தலைமுறைக்குக் கடந்தகால வரலாறு தெரியாது என்கிற தைரியத்தில் முதல்வர் இப்படிக் கூறுகிறாரோ என்னவோ?
- தினமணி கட்டுரை ( 11-06-2009) இருந்து.
Sunday, June 7, 2009
விவசாயியே வெளியேறு!
ஆட்சியைப் பிடித்தவர்கள் கட்சிகளை மாற்றுகிறார்கள். மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவிக்காக கொள்கைகளைக் குப்பையில் கொட்டியபின்பும் சாயம் வெளுக்காத சில சமரசங்கள் அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரலாம்.
எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஆண்டுதோறும் விவசாயத்தைக் கைவிட்டு பெருநகரங்களின் சேரிகளில் குவியும் விவசாயிகளின் நிலை ஏறத்தாழ இலங்கை அகதிகளைவிடக் கேவலமாயுள்ளது. விவசாயிகளின் வாரிசுகள் இன்று விவசாயம் செய்யத் தயாராக இல்லை. 1980 - 89 காலகட்டத்தில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள் 2004 - 05 காலகட்டத்தில் என்ன ஆனார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் திரட்டப்படுமானால் இந்த உண்மை வெட்டவெளிச்சமாகும்.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். நகரங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவியல் நுட்பம் நன்கு தெரிந்த சிறு - குறு விவசாயிகளாவர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தாமாகவே வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.
அரசுத்தரப்பு புள்ளிவிவர அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993-லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மூன்று லட்சம்.
2006-லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தியாவில் இவ்வளவு அரசியல் கட்சிகள் இருந்தும் எந்த ஒரு கட்சியாவது விவசாயிகளின் தற்கொலையை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஒரு தேசம் தழுவிய மாநாடு கூட்டியோ ஊர்வலம் நடத்தியோ ஏதும் ஒரு பொதுக்கூட்டத்தில் விவாதித்ததா? மாநில அளவிலாவது இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா? எதுவுமே செய்யப்படாததன் பொருள் என்ன? திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், விவசாயிகளை வெளியேற்றுவதும் ஒரு திட்டக் கொள்கையாக மாறிவிட்டதுதான் பரிதாபகரமான உண்மை நிலை. இது எவ்வாறு என்றால் அமெரிக்கா திட்டமிடுகிறது. அதை இந்தியா நிறைவேற்றுகிறது. அமெரிக்காவில் எவையெல்லாம் நிகழ்ந்தனவோ அவையெல்லாம் இந்தியாவில் நிகழப் போகின்றன.
ஓர் அரசு மேல்மட்ட அதிகாரியையோ, அரசுத்துறை விவசாய விஞ்ஞானியையோ பார்த்து, இந்திய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். ரெடிமேட் பதில்கள் நிறையக் கிடைக்கும்.
உற்பத்தித்திறன் குறைவதால் வருமானம் குறைகிறது. அதனால் தற்கொலை என்பார். விவசாயம் காரணமல்ல. திருமணச் செலவு காரணமாகக் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையை மூடி மறைக்கவே இப்படியெல்லாம் விவசாயத் துறையினர் காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.
பசுமைப்புரட்சி நிகழ்வதற்கு முன் குறிப்பாக 1960 - 69 பதிற்றாண்டில் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டதாக எதுவும் செய்தி இல்லையே. அன்றும் விவசாயிகளின் பெண்களுக்குக் கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித்திறனும் பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உலகளாவியதாக இருந்தது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகின் எல்லா இடங்களிலும் உற்பத்தியை உயர்த்துவது ஒரு பொதுவான லட்சியமே. வளர்ச்சியுற்ற நாடுகளில் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டு இயங்கும் இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இரு நாடுகளின் வேளாண்மைப் பொருளியல் ஒப்பிடக்கூடியதும் அல்ல. அமெரிக்காவில் 7 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அமெரிக்காவில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 70 லட்சம். ஒட்டுமொத்த அமெரிக்க சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமே விவசாயிகளின் எண்ணிக்கையாக உள்ளது.
இரண்டாவது உலகப் போருக்கு முன்பு அமெரிக்காவில் 3 கோடி விவசாயிகள் இருந்தனர். அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட் என்ற வர்த்தகக் கூட்டணி கைப்பற்றியது. சுமார் 2.7 கோடி விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றியது. இன்றைய அமெரிக்காவின் விவசாயக் கொள்கை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சி நிரலாக மாறிப்போனது.
2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கு கடைசியாக எடுக்கப்பட்டபோது வேண்டுமென்றே விவசாயிகளின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவில் விவசாயிகளின் தொகை சுருங்குவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்று ஐரோப்பாவிலும் விவசாயிகள் அழிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாக விவசாயக் கொள்கைகளுக்கு மத்தியில் கணிசமாக உள்ளது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 20 கோடி. உலக விவசாயிகளில் 10-க்கு நால்வர் இந்திய விவசாயிகள். இந்தியாவின் விளைநிலம் 139 கோடி ஹெக்டேர். விவசாயியின் சராசரி நில அளவு 1.4 ஹெக்டேர். இந்தியாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின் சராசரி நில அளவு 2000 மடங்கு கூடுதல். இந்தியாவில் விவசாயம் வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் வியாபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்காவின் அனுபவம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்பதே விளங்காத புதிராக உள்ளபோது, இந்தியாவிலும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறும் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. குறிப்பாக 1980-க்குப் பின் கிராமங்களைவிட்டு வெளியேறிய சிறு - குறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும்.
இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய உணவு அரிசி. அமெரிக்காவில் அரிசி ஏற்றுமதிச் சரக்கு. ""அமெரிக்காவில் அரிசியின் உற்பத்தித்திறன் 7 டன். இதுவே இந்தியாவில் 3 டன். ஆகவே இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்க வேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால் போதும். நல்ல லாபம் வரும். நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் இல்லை. விவசாயப் பிரச்னைகள் எல்லாமே உற்பத்தித் திறனை உயர்த்தினால் போதும்...'' இப்படித்தான் நமது நிபுணர்கள் நினைக்கின்றனர். இது சரியல்ல.
அமெரிக்காவில் மொத்த அரிசி உற்பத்தியின் பணமதிப்பு 1.2 பில்லியன் டாலர். இந்த அளவில் அரிசி உற்பத்தி செய்ய 1.4 பில்லியன் டாலர் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரொக்கமாக இந்த அளவு மானியம் பெறுவதால் 7 டன் உற்பத்தித்திறன் சாத்தியமாகிறது. இந்திய விவசாயிகளுக்கும் இந்த அளவுக்கு மானியம் வழங்குவது சாத்தியமா? இந்த அளவில் மானியம் பெற முடியாத சூழ்நிலையில் நிபுணர்களின் பேச்சைக்கேட்டு அதிகம் முதலீடுகளைக் கொட்டி அதிக உற்பத்தி செய்தும் அதற்கான சந்தையும் விலையும் இல்லாமல் நஷ்டமடைந்து கடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.
நமது விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், ""விவசாயிகள் எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக் கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல் தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது''.
ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள் நுழைந்துவிட்டனர். இன்று அமெரிக்க உபதேசத்தை வேதமாகக் கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் அமைச்சர்கள் விவசாயத்தை லாபகரமாக மாற்ற ஏற்றுமதிக்குரிய மாற்றுப்பயிர்த்திட்டத்தை முன்வைக்கின்றனர். கொய்மலர், வெள்ளரிக்காய், கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என்ற வரிசையில் பல வகைப் பயிர்கள் உண்டு. இவற்றைப் பயிரிடும் தகுதி உணவு விவசாயம் செய்யும் ஒன்றே முக்கால் ஏக்கர் பேர்வழிகளுக்கு இயலாது. கார்ப்பரேட்டுகள் அல்லது கார்ப்பரேட்டுகளின் பக்கபலம் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் உண்டு.
ஏற்றுமதி எத்தர்களால் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து ஏமாந்துபோன விவசாயிகள் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு தென் அமெரிக்க நாடுகளில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்து கார்ப்பரேட் பயன் அடைந்தார்கள். ஆனால் உணவு உற்பத்தி குறைந்து அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறு - நடுத்தர விவசாயிகள் வெளியேறி விட்டனர்.
இதேபோக்கு இந்தியாவில் தென்படுகிறது. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய அறிவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்கப் பாரம்பரியத்தை ஏற்கும் நிலை புதிய புதிய நவீன ரசாயன - இயந்திரத் தொழில் நுட்பங்கள் மூலம் அறிமுகமாகி விட்டதால் இந்திய மண்ணில் இனி பாரம்பரிய விவசாயிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
இனி எதிர்காலத்தில் இந்திய விவசாயம் முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின் வசமாகிவிடும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் வேகமாக சொந்த மண்ணைவிட்டு உள்ளூர் அகதிகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. - Dinamani katturai paguthiil irunthu....
Tuesday, June 2, 2009
ஐ.நா.வில் நடந்த மனித உரிமை படுகொலை!
சுதந்திரத்தையும், சம உரிமையையும் கோரிப் போராடிய தனது நாட்டு மக்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியும், விமானத்தில் இருந்து குண்டு வீசியும், பெரு நாசம் ஏற்படுத்தும் குண்டுகளை வீசியும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்று குவித்த சிறிலங்க அரசிற்கு மனித உரிமைகளை மேம்படுத்தவும் காப்பாற்றவும் உதவுவோம் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உலகையே ஒரு அதிர்ச்சி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஐ.நா. மனித உரிமை மன்றம்!
21ஆம் நூற்றாண்டில், உலகின் 200க்கும் மேற்பட்ட சுதந்திர நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. அமைப்பில் மனித உரிமைக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை ஐ.நா.மனித உரிமை மன்றம் சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானம் மட்டுமே சாட்சியல்ல, அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பேச்சும் அதற்கு அத்தாட்சியாகும்.“விடுதலைப் புலகளுக்கு எதிரான போரை முடித்துவிட்டோம்” என்று கடந்த 18ஆம் தேதி திங்கட்கிழமை சிறிலங்க இராணுவம் அறிவித்த போதே அது எப்படி முடிக்கப்பட்டது என்பது குறித்து உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி தெரிவித்தன. வன்னிப் பகுதியில் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 2 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்ட நிலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தஞ்சமடைந்திருந்த 55,000க்கும் அதிகமான மக்களை சக்தி வாய்ந்த குண்டுகள் வீசி அழித்தொழித்துவிட்டு, விடுதலைப் புலி பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று கூறியது சிறிலங்க இராணுவம்.மறுநாள் அதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச. போரை முடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட அந்தக் கணத்தில் இருந்து, இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் அந்த இடத்தில் இருந்து இதுநாள்வரை ஒரு செய்தியும் உலகத்திற்கு வரவில்லை. சொல்வதற்கு அங்கு சிறிலங்க இராணுவத்தைத் தவிர ஒரு மனிதரைக் கூட விட்டு வைக்கவில்லை. அப்படிப்பட்ட அப்பட்டமான மனிதப் படுகொலை ஒரு சில ஜனநாயக, அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் கன கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.அந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்த பிறகுதான் சிறிலங்க அரசிற்கு எதிராக போர் குற்றம் புரிந்ததாகவும், இனப் படுகொலை நடத்தியதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாற்றுகள் எழுந்தன.அங்கு நடந்த கோரப் படுகொலையை அமெரிக்கா, ஐ.நா. செயற்கைக் கோள்கள் படம் பிடித்ததாக செய்திகள் வரத் தொடங்கிய பிறகுதான் போர் குற்றத்திற்காக சிறிலங்கா அரசை பொறுப்பாக்க அங்கு பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.
இதனைத் தொடர்ந்தே ஐ.நா. மனித உரிமை மன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அதன் 47 உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியும், அதோடு மேலும் 15 நாடுகளும் கோரிக்கை விடுத்தன்.மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும். அதன்படி, கடந்த 26ஆம் தேதி செவ்வாய் கிழமை ஜெனிவாவில் அச்சிறப்புக் கூட்டம் கூடியது உலகத் தமிழர்கள் மத்தியிலும், அவர்களின் போராட்டத்தின் காரணமாக இலங்கை இனச் சிக்கல் குறித்து விழுப்புணர்வு பெற்ற ஐரோப்பிய நாட்டினரிடையேயும் ஏற்பட்டது. இதனிடையே வன்னியில் அப்பாவி மக்கள் தஞ்சமடைந்துள்ள பாதுகாப்பு வலயப் பகுதி மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று அளித்த உறுதி மொழியைத் தாண்டி, பொது மக்களை குறிவைத்து சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியதற்கான செயற்கைக் கோள் படங்கள் (ஐ.நா.வின் செயற்கைக் கோள் எடுத்தது) ஊடகங்களில் வந்தது.இந்தப் பின்னணியில் கூடிய ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், அதற்குக் கோரிக்கை விடுத்த நாடுகளின் (Special procedures mandate holders) சார்பாக சுவிட்சர்லாந்து முன்மொழிந்த தீர்மானம் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இறுதிப் போர் நடந்தபோது அதில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எத்தனை ஆயிரம் பேர் என்றோ, காயமுற்றவர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்றோ, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்தோ அல்லது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி மே 18ஆம் தேதி காலையில் நடத்திய மனிதப் படுகொலை குறித்தோ அல்லது அன்று நடந்த போர் குற்றம் குறித்தோ அந்தத் தீர்மானத்தில் ஏதும் இல்லை.மாறாக, போர் முடிவிற்கு வந்ததற்காக சிறிலங்க அரசிற்கு பாராட்டும், பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று விடுதலைப் புலிகளின் மீது குற்றச்சாற்றும்தான் இருந்தது.அதைவிட வேடிக்கை என்னவெனில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் போர் விதிகள் மீறலோ அல்லது மனித உரிமை மீறலோ நடந்ததாக வரும் குற்றச் சாற்றுகள் மீது சிறிலங்க அரசே விசாரணை நடத்தி அதற்குக் காரணமானவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தின் 12வது கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தது.
போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த சிறிலங்க அரசே அதற்குக் காரணமானவர்களை விசாரணை நடத்தி கண்டுபிடித்து (!) பொறுப்பாக்க வேண்டுமாம்! எப்படியிருக்கிறது நாடகம்!சிறிலங்க அரசே தன் மீது விசாரணை நடத்திக் கொள்ள எதற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தை சிறப்பாக கூட்ட வேண்டும்?சுவிட்சர்லாந்து முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை படித்த அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் பிராண்சிஸ் பாய்ல் (இவர் சர்வதேச, மனித உரிமை சட்டங்களில் வல்லுனர்), “இப்படிப்பட்ட கொள்கையற்ற, வெட்கமில்லாத ஒரு தீர்மானத்தை ஐ.நா.வின் எந்த ஒரு அமைப்பும் அதன் வரலாற்றில் நிறைவேற்றியதில்லை” என்று கூறிவிட்டு, “இரண்டாவது உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலை தொடர்பாக ஹிட்லரே விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தால் அது எவ்வளவு பெரிய பித்தலாட்டமாக இருந்திருக்குமோ அதுவே இங்கு நடைபெறுகிறது” என்றும் விமர்ச்சித்தவர் ஜெனிவாவிலிருந்தே வெளியேறினார்.ஆயினும் இந்த அளவிற்கு சிறிலங்க அரசை குற்றம் சாற்றாத ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற விடாமல் தோற்கடித்த இந்திய, சீன, இரஷ்ய நாடுகள், சிறிலங்கா தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு முன்மொழிந்த ஒரு தீர்மானத்தை மிகவும் பாராட்டி அதனை 29க்கு 12 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றின.இந்த இரு தீர்மானங்களின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பேச்சு, இவர்கள் பிரச்சனைகளை புரிந்துதான் பேசுகிறார்களே அல்லது இவையாவும் முன் திட்டமிடப்பட்ட நாடகமா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.“இக்கூட்டத்தில் தனது நாட்டு அமைச்சரையே பங்கேற்கச் செய்ததன் மூலம் மனித உரிமை காப்பதில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டினை சிறிலங்க அரசு மெய்பித்துள்ளது” என்று பல நாடுகள் பாராட்டின.
இந்த சிறப்புக் கூட்டத்தைத் துவக்கிவைத்து (வீடியோ காண்பரன்சிங் மூலம்) உரையாற்றிய ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, “கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து அங்கு நடந்த கடும் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர், காயமுற்றுள்ளனர் அல்லது இடம் பெயரச் செய்யப்பட்டுள்ளனர். போர் பகுதியில் இருந்து வெளியேறிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் முகத்தில் தெரிந்த அச்சமும், சக்தி முழுவதையும் இழந்த நிலையும் நமது நினைவுகளை விட்டு நீங்காதவை, அந்த காட்சிகள் நம்மை என்ன செய்ய வேண்டுமோ அதனை நோக்கி நம்மைத் தள்ளட்டும்” என்று கூறியவர், இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினரும் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளில் அத்துமீறியுள்ளார்கள் என்று நம்புவதற்கு இடமளிக்கிறது. எனவே, சுதந்திரமான ஒரு பன்னாட்டு புலனாய்வை நடத்தி மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு பொறுப்பாக்க வேண்டு்ம்” என்று பேசினார்.ஆனால், இப்படி எந்த ஒரு நாட்டின் பிரதிநிதியும் பேசவில்லை. நவி பிள்ளை பேசியது போல் அப்படியெல்லாம் இலங்கையில் ஏதும் நடக்கவில்லை என்று நம்பியவர்களைப் போலவே பேசினர்.இன்றுள்ள நிலையில் சிறிலங்க அரசிற்கு உரிய உதவிகளைச் செய்து அது சந்தித்துவரும் அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிட வேண்டுமே தவிர, இந்தச் சிறப்புக் கூட்டமெல்லாம் தேவையற்றது என்று இந்தியாவின் பிரதிநிதி பேசினார்! பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைக்கு அனைத்து உதவிகளையும் செய்த நாடுகளான இந்தியாவும், சீனாவும், இரஷ்யாவும் தங்களுடைய பன்னாட்டு நட்பு நாடுகளை ஆதரவாக்கிக் கொண்டு, மனித உரிமைகளையும், நாகரீக நடைமுறைகளையும் துவம்சம் செய்துவரும் சிறிலங்க அரசிற்கு மனித உரிமை காப்பாளர் என்ற நற்சான்றிதழை பெற்றுத் தருவதில் வெற்றி பெற்றுள்ளன.இந்தச் சிறப்புக் கூட்டம் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்யத் தவறியது, மானுடத்தின் உன்னத மாண்புகளை ஆழ குழிதோண்டி புதைத்த ஒரு அரசை தங்கள் நட்புறவைக் கொண்டு காப்பாற்றி விட்டுள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு நடந்த ஒரு மாபெரும் மனிதப் படுகொலையை மறைக்கும் முயற்சியில் இந்த நாடுகள் வெற்றி பெற்றதாகக் கருதலாம். ஆனால் அவர்களின் இந்த மானுட துரோகம் ஒரு நாள் தலையெடுக்கும்.இரத்தத்தோடு புதைக்கப்பட்ட உண்மை எதுவும் சாவதில்லை, மீண்டும் எழும்.
- வெப் உலகம் கட்டுரைகள்
Thursday, May 21, 2009
பிரபாகரன் மரணம்:
ஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்'' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்துவருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர்.
மரணம் எழுப்பும் கேள்விகள்: இலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று சுட்டிக்காட்டும் சடலத்தை முன்வைத்தே பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆழமற்ற களப்புப் பகுதியிலிருந்து பிரபாகரன் எங்கே தப்பிச் செல்ல முயன்றார்? கடல் பரப்பு முழுவதையும் ராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு நோயாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி? தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேஷத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார்? அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி?...
இப்படி ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுவதோடு முக்கியமான ஒரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது: பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றிய செய்திகள்.நீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவத் தோற்றமுடையவரை புலிகள் வெளியுலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்குமிடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுவருகிறது.
இதை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களும் அந்த இயக்கத்திலிருந்தே விலகியவர்களும்கூட சொல்வதுண்டு. ஊடகங்களிலும் அவ்வப்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியைத் திட்டமிட்டு புலிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ஏராளமான தரவுகள் கிடைத்திருக்கின்றன.
பதுங்குக் குழி ஆதாரங்கள்: பிரபாகரன் தங்கியிருந்ததாக ராணுவம் நம்பும் எல்லா பதுங்குக் குழிகளிலுமே பிரபாகரன் அங்கிருந்ததற்கான ஆதாரமாக ஏதேனும் சில பொருட்களை விட்டுச் செல்லும் தந்திரத்தை புலிகள் கையாண்டனர்.
சில பதுங்குக் குழிகளில் அவர் அணியக் கூடிய அளவுடைய சட்டை, தொப்பி; சில இடங்களில் "இன்சுலின்' ஊசிகள் (பிரபாகரன் நீரிழிவு நோயாளி), சில இடங்களில் அவர் படுத்திருந்தது என்று நம்பத் தக்க வகையில் படுக்கை, அவருடைய குடும்ப புகைப்படங்கள், சான்றிதழ்கள் இப்படி...
இதற்கு முன்னர், மரபணுச் சோதனை நடத்துவதற்கு பிரபாகரன் தொடர்பான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இலங்கை ராணுவத்திடம் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆதாரங்களைத் திட்டமிட்டே புலிகள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதாவது, பிரபாகரன் உருவமைப்பைக் கொண்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை விட்டுச் சென்று, பிற்பாடு பிரபாகரனுக்குப் பதில் அவருடைய சிதைந்த சடலத்தை பிரபாகரன் என்று நம்ப வைப்பதற்கான ஓர் உத்தி.
பதுங்கும் இடத்தை யார் கூறுவார்?: பொதுவாக விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்குமிடங்களே பரம ரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுற்றி வளைக்கப்படும் வரை பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்ப புலிகள் கூறிக்கொண்டிருந்தனர். இது பெரிய அளவிலான சந்தேகங்களை எழுப்புகிறது.
அந்த அமைப்பின் அரசியல் தொடர்பாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகத் தொடர்பாளர்கள் மட்டுமின்றி, அரசுப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
போரின் கடைசி இலக்கே பிரபாகரன்தான் என்ற சூழலில், பிரபாகரனைப் பாதுகாப்பதற்காகவே ஒரு சிறப்புப் படையையே நிறுவும் அளவுக்கு அவருடைய உயிரில் அக்கறையுடைய புலிகள், அவர் இருக்குமிடத்தை எப்படி அலட்சியமாகப் பறைச்சாற்றுவார்கள்?
ஆகையால், ராணுவத்தை திசைத் திருப்புவதற்காகவே புலிகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் தந்திரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலேயே நடேசன் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களை போர்க்களத்திலேயே இருக்குமாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மரணச் செய்தி - இரு தரப்புகளின் நிர்ப்பந்த சூழல்: இந்தப் போரின் வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவித்தாலும், உண்மையில் இலங்கை அரசின் இறுதி இலக்கு பிரபாகரன்தான். போர்க் காலகட்டத்தின் இடையே நடைபெற்ற தேர்தல்களிலும் இதைப் பிரதான முழக்கமாக முன்வைத்தே இலங்கை அதிபர் ராஜபக்ஷ வெற்றிகளைக் குவித்தார்.
எனவே, வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதோடு போரை முடித்துக்கொண்டதாக அறிவித்தால், அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேறறுத்துவிட்டதாக முன்னெடுக்கப்படும் பிரசாரமும் முழு வெற்றி பெறாது.
ஆகையால், இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலையிலேயே அரசுத் தரப்பு இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளும் இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே இருக்கின்றனர். முக்கியமான காரணம், போர்ச் சூழலிலிருந்து விடுபடுவதாகும். முன்னதாக, அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே அமெரிக்க அணுகுமுறையில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். இங்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிடில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். போர்ச் சூழலில் புதிய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், சில காலத்துக்கு பதுங்கியிருப்பதே நல்லது என்று அவர்கள் கருதினர். இந்நிலையில், பிரபாகரனின் மரணச் செய்தி ராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்ப உதவுவதோடு, உலகின் கவனத்தையும் தமிழ் மக்களின் அவலத்தை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
முடிவுகளைத் தீர்மானித்த ஆனந்தபுரம்: இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே ராணுவம் உள்ளே புக அனுமதிப்பதை புலிகள் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற உத்தியைத்தான் அவர்கள் பின்பற்றினர். இலங்கை ராணுவம் முழுவதையும் உள்ளேவிட்டு, திடீரென ஊடறுப்புத் தாக்குதல் மூலம் ஏறத்தாழ 40,000 வீரர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது சர்வதேச நாடுகளும் இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான அரசு இப்பிரச்னையில் தலையிட்டதன்பேரில், இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இம்முறையும் இதே போன்ற ஒரு பாரிய தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடிய இடம் ஆனந்தபுரம். ஒரு சிறிய பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் முக்கியமான களத் தளபதிகள் பலர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் பெரும் தளவாடங்களுடன் குவிந்திருந்த இந்தச் செய்தியை "ரா' அமைப்பின் மூலம் இலங்கை ராணுவம் அறிந்ததாகக் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து ராணுவம் முன்னெடுத்த பாரிய தாக்குதலில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த இத்தாக்குதலில் ராணுவத் தரப்பில் சுமார் 15,000 வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் போரின் இறுதியில் முக்கிய கள தளபதிகள் உள்பட ஏறத்தாழ அங்கு கூடியிருந்த அனைத்துப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்குப் பின்னரே, புலிகளின் மாபெரும் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். கிளிநொச்சி கைவிட்டுப்போன பின்னர், ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை புதுக்குடியிருப்பில் கடுமையாகப் போராடிய புலிகள் இத்தாக்குதலுக்குப் பின்னரே முற்றிலுமாக ஒடுங்கிப் போயினர்.
கிழக்குக்குத் தப்பினார் பிரபாகரன்?: ஆனந்தபுரம் வியூகம் தோல்வியடைந்த பின்னர், முடிவை புலிகள் ஓரளவுக்கு யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்கத் தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களைக் கசியவிட்டனர். ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் கடல் பரப்பின் மீது குவிந்திருந்த நிலையில், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.
இலங்கையின் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டாலும், இன்னமும் அங்கு அவ்வப்போது கொரில்ல தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர் புலிகள். குறிப்பாக யாலா காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் பதுங்கி இருக்கின்றனர்.ஆகையால், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை புலனாய்வுத் துறையே வலுவாகச் சந்தேகிக்கிறது. இன்னொருபுறம் சில மாதங்களுக்கு முன்னரே அவர் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது.
உலகம் முழுவதும் தொடர்புகள்: மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒட்டுமொத்த புலிகள் அமைப்பும் ஏதோ முல்லைத்தீவுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிட்டது போன்றும் பிரபாகரனுடன் அந்த அமைப்பே அழிந்துவிட்டதுபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதும் புலிகள் அமைப்பு பரந்து விரிந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் என்று உலகம் முழுவதும் இன்றளவும் மறைமுகமாகச் செயல்படும் ஏராளமானோர் அந்த அமைப்பில் இருக்கின்றனர். வலுவான பொருளாதாரப் பின்னணியும் ஆதரவளிக்க ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.
இது தவிர, பிரபாகரன் குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் அவருக்கு இன்னொரு மகன் இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதேபோல, அவருடைய மனைவி, மகள் ஆகியோருடைய தற்போதைய நிலையும் தெரியவில்லை.
இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியை அவரைப் பின்தொடரும் நிழல்களே உறுதிப்படுத்த வேண்டும்; அல்லது காலமும் வரலாறும் உறுதிப்படுத்தலாம்! - Thanks Dinamani articals.
Wednesday, May 13, 2009
தேர்தல் கணிப்புகள் - என் பார்வையில்
அ.தி.மு.க. கூட்டணி 25 - 31
தி.மு.க. கூட்டணி 8 - 14
பா.ஜ.க. 0-1
தனிதனியே இடங்கள் :
தி.மு.க. 6-8
காங். 1-5
விடுதலை சிறுத்தை 1
அ.தி.மு.க.15-20
ம.தி.மு.க.2-3
பா.ம.க.5
இந்திய கம்யூனிஸ்டு 2
மார்க்சிஸ்ட் கம்யூ 1
பா.ஜ.க. 0-1
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர்கள்,
(1) வட சென்னை தா.பாண்டியன்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)
(2) மத்திய சென்னை தயாநிதி மாறன் -(தி.மு.க.)
(3) தென் சென்னை சிட்லபாக்கம் ராஜேந்திரன்-(அ.தி.மு.க.)
(4) திருவள்ளூர் (தனி) டாக்டர்வேணுகோபால்- (அ.தி.மு.க.)
(5) காஞ்சீபுரம் டாக்டர்இ.ராமகிருஷ்ணன்- (அ.தி.மு.க.) / விஸ்வநாதன் - (காங்)
(6) ஸ்ரீபெரும்புதூர் ஏ.கே.மூர்த்தி-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(7) அரக்கோணம் அரங்கவேலு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(8) வேலூர் எல்.கே.எம்.பி.வாசு- (அ.தி.மு.க.)
(9) கள்ளக்குறிச்சி கோ.தன்ராஜ்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(10) சேலம் செ.செம்மலை- (அ.தி.மு.க.)
(11) தர்மபுரி இரா.செந்தில்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(12) கிருஷ்ணகிரி கே.நஞ்ஜே கவுடு- (அ.தி.மு.க.)
(13) கோவை பி.ஆர்.நடராஜன்- (மார்க்சிஸ்ட் கம்யூ.)
(14) நீலகிரி (தனி) ஆ.ராசா-(தி.மு.க.) / டாக்டர் கிருஷ்ணன்- ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(15) திருப்பூர் திருப்பூர் சிவகாமி- (அ.தி.மு.க.)
(16) நாமக்கல் செ.காந்திசெல்வன்- (தி.மு.க.)
(17) பொள்ளாச்சி கே.சுகுமார்-(அ.தி.மு.க.)
(18) ஈரோடு கணேசமூர்த்தி-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(19) திருவண்ணாமலை ஜெ.குரு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(20) ஆரணி சுப்பிரமணி (அ.தி.மு.க.)
(21) சிதம்பரம் (தனி) தொல்.திருமாவளவன்- விடுதலை சிறுத்தை (தி.மு.க. கூட்டணி)
(22) கடலூர் எம்.சி.சம்பத்- (அ.தி.மு.க.)
(23) மயிலாடுதுறை மணிசங்கர் அய்யர்- காங். / ஓ.எஸ்.மணியன்- (அ.தி.மு.க.) (24) பெரம்பலூர் து.நெப்போலியன்- (தி.மு.க.)
(25) கரூர் கே.சி.பழனிச்சாமி- (தி.மு.க.) / மு.தம்பித்துரை- (அ.தி.மு.க.)
(26) தஞ்சை துரை.பாலகிருஷ்ணன்-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(27) திருச்சி சாருபாலா தொண்டமான்- காங். / ப.குமார்- (அ.தி.மு.க.)
(28) விழுப்புரம் (தனி) எம்.ஆனந்தன்- (அ.தி.மு.க.)
(29) நாகை (தனி) ஏ.கே.எஸ்.விஜயன்- (தி.மு.க.)
(30) மதுரை மு.க.அழகிரி- (தி.மு.க.)
(31) சிவகங்கை ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்- (அ.தி.மு.க.)
(32) ராமநாதபுரம் வ.சத்தியமூர்த்தி- (அ.தி.மு.க.) / திருநாவுக்கரசர்- (பா.ஜ.க.)
(33) விருதுநகர் வைகோ- (ம.தி.மு.க.)
(34) தேனி ஆரூண்- காங். / தங்கதமிழ்ச்செல்வன்- (அ.தி.மு.க.)
(35) திண்டுக்கல் பி.பாலசுப்பிரமணி- (அ.தி.மு.க.)
(36) நெல்லை ராமசுப்பு-காங். கே.அண்ணாமலை- (அ.தி.மு.க.)
(37) தென்காசி பொ.லிங்கம்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)
(38) தூத்துக்குடி டாக்டர் சிந்தியா பாண்டியன்- (அ.தி.மு.க.)
(39) கன்னியாகுமரி ஜெ.ஹெலன் டேவிட்சன்- (தி.மு.க.)
(40) புதுச்சேரி நாராயணசாமி- காங்.
Sunday, May 3, 2009
நில் , கவனி, வாக்களி!
இன்றைய தேர்தல் அப்படியில்லை. ஆறு மணிக்கு ஒருவர் வழுக்கி விழுந்தால், கொஞ்சம் நாகரீகமாகச் சொல்வதென்றால், ஆறுமணிக்கு ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டால் அடுத்த நிமிடம் எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் அது முதன்மைச் செய்தியாகிவிடுகிறது. வீசப்பட்ட செருப்புக்கு ஒரு விளம்பரம் தேசிய அளவில் கிடைத்தும் விடுகிறது. விட்டால், இந்த செருப்பு வீசும் நிகழ்ச்சியை உங்களுக்காத் தொகுத்து வழங்குவது "முனியாண்டி செருப்பு கம்பெனி" என ஸ்பான்சர்ஸ் கூட கிடைப்பார்கள்.
ஊடகத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பயனாக, ஆளாளுக்கு தனித் தனி சேனலை ஏற்படுத்திக் கொண்டு அதை கிட்டத் தட்ட அரசியல் பிரசார மேடையாகப் பயன்படுத்தி வருகின்றனர். சுவரில் போஸ்டர் ஒட்டுவது தேவையற்றுப் போய்விட்டது, எல்லார் வீட்டு வரவேற்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டி ஒட்டி வைக்கப்பட்ட பின். மக்களின் நாடித் துடிப்பை அரசியல் கட்சிகள் கணிக்கவும், புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப நாள் தோறும் பல்டியடிக்கப் பழகவும் இந்த ஊடக வளர்ச்சி பெரும் துணை செய்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள் வரை எட்டாவது பக்கத்தின் கடைசியில் இடம் பெற்ற "இலங்கையில் யுத்தம்" எனும் செய்தி இன்று எல்லா பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் ஈழமாகவும், ஈரமாகவும் இடம்பெறக் காரணமும் இந்த அரசியல் கணிப்புகள் மட்டுமே.
தேர்தல் முடிந்த மூன்றாவது நாளே ஈழமாவது. சோளமாவது எங்கேயாவது ஒரு எஸ்டேட்டில் போய் நிம்மதியா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுப்போம் என தலைவர்கள் கழன்று கொள்ளப் போவது மட்டும் அக்மார்க் உண்மை.
இப்போதைக்கு தமிழனின் உயிர் அவர்களுக்கு துருப்புச் சீட்டு. ஈழம் என்று கூட சொல்லக் கூடாது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தவர்கள் கூட தனி ஈழம் என தாவியதற்கு 40-ஐத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்பதை அரசியல் கைக்குழந்தைகளும் அறியும்.
"அழுத்தமாய் சொன்னால்" போர் நிற்கும் என்று தெரிந்தாலும் கூட்டணிக்காக அமைதிகாக்கும் அரசியல் கட்சிகளில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையையும் தமிழகம் நன்கறியும்.
இலங்கைக்கு வெளிப்படையான ஆதரவை சீனா அளிப்பதால், இலங்கையில் சீனாவின் தளம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தாகிப் போகும் எனும் பதற்றம் இந்திய ராணுவத்திடம் இருப்பதும் கவனிக்கத்தக்கது.உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பதில் பேர் போன தமிழக மக்களை எப்படியேனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் எனும் தலையாய கவலை அரசியல் கட்சிகளுக்கு. "போர் நிறுத்தம் கொண்டு வா..." எனக் கதறும் அரசியல் கட்சிகள், ஒரு வேளை போர் நிறுத்தம் வந்து விட்டால் உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்து, "அய்யோ ஓட்டு போய்விட்டதே..." என கதறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீ ஒன்று சொன்னால், நான் இன்னொன்று சொல்வேன் என மாறிமாறி தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் உடுக்கையடிப் பிரசாரம் நிகழ்த்துவதில் குழம்பிப் போய் இருப்பவர்கள் பொது மக்கள் மட்டுமே.
காலையில் ஒரு கட்சி மீது மக்களுக்கு இருக்கும் அபிப்பிராயம், மாலையில் மாறிவிடுகிறது. இரண்டு பேருமே அப்படித் தான் என மூன்றாவது நபருக்கு ஓட்டு போடலாமா என யோசிக்கும் மக்களைப் பரவலாக எங்கும் காண முடிகிறது. ஊடகங்களும், இணையமும் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் இன்றைய சூழலில் ஒரு பொதுப்படையான கருத்துருவாக்கத்தை பரவலாக நிறுவுவதென்பது சாத்தியமில்லை எனும் நிலையே காணப்படுகிறது.
வெறும் மேடைப்பேச்சுகளை மட்டும் வைத்து எந்த அரசியல் வாதியையும் கணிக்க முடியாது. கணிக்கக் கூடாது. அது ஏசி அறையில் இருந்து கொண்டு சென்னையே குளிர்கிறது என்று கணிப்பதற்கு சமம்.
ஒரு தலைவர் வாக்குறுதிச் சுருக்குப் பையைத் திறந்து அள்ளி விடுகிறார் எனில் கொஞ்சம் கவனியுங்கள். சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே எழுப்புங்கள்.
இந்த தலைவருக்கு இந்தப் பிரச்னையில் கடந்த மாதம் இருந்த நிலைப்பாடு என்ன? கடந்த வருடம் இருந்த நிலைப்பாடு என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைப்பாடு என்ன? தொடர்ச்சியாக ஒரே மாதிரியான நிலைப்பாடு கொண்டிருந்தார் எனில், அந்த சிக்கலில் முடிந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் எனில் அவருடைய வாக்குறுதி குறைந்த பட்ச நம்பிக்கைக்கு உரியது என கருதிக் கொள்ளலாம்.
இரண்டாவது, அந்தப் பிரச்னை சம்பந்தமாக நபர் தந்திருக்கும் வாக்குறுதி நிறைவேற சாத்தியக் கூறுகள் என்னென்ன? அந்தத் தலைவர் ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சியமைக்க சாத்தியம் உண்டா? அந்த தலைவர் ஆதரிக்கும் கட்சியின் தலைமை, உயர் மட்ட தலைவர்கள் அனைவரும் இந்த கொள்கையோடு சற்றேனும் உடன்பாடு உடையவர்கள் தானா? என சில கேள்விகளை எழுப்புங்கள்.
மூன்றாவதாக, எல்லோமே சரியாய் இருந்தால் சர்வதேச அளவில் இந்த திட்டத்தை அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியுமா என யோசியுங்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்தெந்த நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும், அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்பன போன்றவற்றை ஆராய்தல் மிக முக்கியம்.
நான்காவதாக, இது ஏன் கடந்த காலத்தில் நிகழவில்லை? அதற்கு எழுந்த முட்டுக் கட்டைகள் என்ன? அந்த முட்டுக் கட்டைகள் வரும் ஆட்சியில் வருவதற்கான வாய்ப்புகள் என்ன? என்பதை கவனியுங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக கண்மூடித் தனமாக ஒருவர் தரும் வாக்குறுதியை நோக்கி கேள்விகளை எழுப்புங்கள். "இதை நிறைவேற்ற நீங்கள் வைத்திருக்கும் திட்டத்தை தெளிவாக்குங்கள்" என விசாரியுங்கள்.
நிலவில் நிலம் வாங்கித் தருவேன் என்றவுடன், மொட்டை மாடியில் படுத்துக் கிடந்து நிலவைப் பார்த்துக் கொட்டாவி விட்டால், அடுத்த தேர்தலில் ஆளுக்கு நான்கு நட்சத்திரம் என்ற வாக்குறுதி வந்து சேரும்.
இந்திய நாட்டின் ஒட்டுமொத்த அமைதி, மக்களின் ஒற்றுமை, சுதந்திரம், பாதுகாப்பு உணர்வு, நட்புறவு, சர்வதேச அங்கீகாரம், உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் ஆராய்ந்தே யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை முடிவெடுங்கள்.
கடைசியாக ஒன்று, குப்பைத் திரைப்படங்களைப் பார்க்க குடும்பத்துடன் மூன்று மணி நேரம் ஒதுக்கும் நாம், இந்த முறை குடும்பத்தினரோடு மூன்று மணி நேரம் அமர்ந்து கலந்துரையாடினாலே நாட்டின் தலைவர் யாராய் இருந்தால் நலம் என்பது புரிந்து போகும்.
முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் மட்டுமே!
திணிக்கப்பட்ட அபிப்பிராயங்களை வெளியேற்றுங்கள்... வாக்களியுங்கள்... இந்தியா செழிக்க வாய்ப்பளியுங்கள்!
- Youthful vikatan lirunthu
Tuesday, April 21, 2009
எங்கே போனது நம் எல்லோரின் பணம்?
பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.
மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.
இதே நிலை, அதாவது பணப் புழக்கம் அதிக அளவாகி, உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதைத் தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன்பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்கப்பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது.இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்கபட்டது.மேலே சொன்ன சமன்பாட்டில் (MV=PQ) உள்ளபடி ஒட்டு மொத்த பணத்தின் அளவு (M) அதிக பணம் அச்சிடப்பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும் (V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி (Q) அளவும் அந்தளவுக்கு உயரவில்லை.உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின் (P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்தப்பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது உண்டாகும் இழப்பே தற்போது ஏற்படும் இழப்புகள் எல்லாம். இந்த விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் இப்போது நட்டம் அடைவது இயற்கையானது தான். ஆனால் இந்த இழப்பை செயற்கையாக தடுக்க எடுக்கப்படும் முற்சியின் விளைவை இனி வரும் காலங்களில் காணலாம்.Saturday, April 18, 2009
18 ஆவது காதல்.
தூங்கி எழுந்து வந்த ரமேஷ் துண்டுடன் நிற்கும் விவேக்கை பார்த்து, "ஏண்டா காலங்காத்தால இப்படி மும்தாஜ் மாதிரி நிக்குற?" என்றான்.
"நம்ம ரூம் சாஜகான் என்னை இப்படி நிக்க வெச்சுட்டான்"
"ரூம் சாஜகான்? யாரு நம்ம பிரகாஷா?"
"என்ன நம்ம பிரகாஷ்? நீ அவன் கூட்டாளியா? ஊருக்குள்ள இப்படி சொன்ன நீ செத்த!!"
"ஏன் டா?"
"இன்னைக்கு சார் ப்ரொபோஸ் பண்ண போறார்... நான் ரெண்டு நாள் என் அத்தை வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்!!"
"ஹ ஹ ஹ .. இன்றுடன் ஒழிந்தான் துரோகி.."
"நண்பா.. பிரகாஷு.. இந்த முடிவ நீ மாத்திகாத.. நீ போய்டா இங்க எல்லாத்தையும் நான் பார்த்துகறேன்.. அப்புறம் போன வருஷம் செத்த எங்க தாத்தாவ கேட்டதா சொல்லு.." என்று குளித்துகொண்டிருபவனுக்கு கேட்கும் படி கத்தினான்.
"போங்க டா இவனுகளா.. சாய்ந்தரம் அவள நம்ம ரூமுக்கு கூட்டிட்டு வந்து, 'இனி இவனுக தான் உன் அண்ணன்கள்'னு உங்கள அறிமுகபடுத்துனா என்ன தருவீங்க ? "
"கவலையே படாத வீங்க வீங்க தருவோம்.."
"இது நடந்தா நான் தீ குளிக்கிறேன்.. ஆனா எந்த கட்சியும் என்ன சொந்தம் கொண்டாடாம பாத்துகோங்கடா?"
"தம்பி அரசியல் எல்லாம் வேண்டாம்.. நீ ஏன் தூண்டோட நிக்கற?"
"டேய் அவன் குளுசுட்டு வந்துடான் டா.. சரி குளிக்கலாம்னு போனேன்.. அதுக்குள்ள மறுபடியும் பூந்துட்டான்..காதல்னா சும்மாவா? இன்னைக்கு நீ குளிக்கலைன்னு யார் அழுதா? கிளம்பு கிளம்பு.. இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும்.."
"அரை மணி நேரமா? இன்னும் அஞ்சு நிமுசத்துல வரல, வெளி தாழ்பாள் போட்டுட்டு வெளிய போய்டுவேன்.. வந்தாச்சு டா.. காதலிக்க போகும் போது இம்ச பண்ணறது உங்கள விட்டா வேற ஆள் இல்ல டா.. என் காதலுக்கு நீங்க தான் வில்லன்.."
"ஹீரோ காதலுக்கு தான் வில்லன்.. காமெடியன் காதலுக்கு ஏது டா வில்லன்?" என்று சொல்லிய வாரே குளிக்க சென்றான் விவேக்!!
"நான் தான் வில்லன்.. பொண்ணோட அண்ணன்னு சொல்லி நீ என்னை அறிமுகம் செய்.. அடுத்த நிமுசம் உன்ன அடுச்சு கொல்லறேன்.. ஆன்டி-கிளைமாக்ஸ் .. நல்லா இருக்கா ? ஆன்டி கிளைமாக்ஸ், சித்தப்பா கிளைமாக்ஸ் னு மொக்க போடாம இந்த டிரஸ் நல்லா இருக்கானு பாத்து சொல்லு.."
"சரி நான் டீ சாப்பட போறேன்.. வரும் போது கிளம்பி போயிரு.."
"பதில் சொல்லு டா.."
"Bye Bye டா.." ரமேஷ் திரும்பி வரும்போது, வேற சட்டையை தேய்த்து கொண்டிருந்தான் பிரகாஷ்.. பின்னாடி குளித்து முடித்து ஈர துண்டுடன் கடுகடுவென நின்று கொண்டிருந்தான் விவேக்..
"டேய் நீ இன்னும் போகலையா?"
(பதில் சொல்லாமல்...) "இந்த சட்ட நல்லா இருக்கா?"
நீ முதல் போட்ட சட்டையே நல்லா இருந்துது.. அதை ஏன் மாத்தின?"
"டேய் நீ வேற சும்மா இரு.. திருப்பியும் மொதல இருந்து ஆரம்பிக்காத.. இது எட்டாவது சட்டை.. ஹி ஹி ஹி .."
"சிரிக்காத.. ஒரு சட்டையையும் ஒரு பேன்டையும் வேற பொசிக்கிட்டான்.."
"விடு காதலுக்கு ஒரு சட்ட தியாகம் செய்யட்டும்.."
"அவன் செய்யட்டும்.. சட்ட என்னுது.. பேன்ட் உன்னுது.."
"டேய்.. நீ அடங்கவே மாட்டியா?"
"டேய் நண்பனுக்காக ஒரு டிரஸ் தியாகம் செய்ய மாட்டீங்களா?" "நண்பனுக்காக செய்வோம் உனக்காக செய்ய மாட்டோம்""டேய் உன் காதலும் இப்படித்தான் பொசுங்கும்.. இதைத்தான் இந்த சம்பவம் காட்டுது.."
"நண்பா .. என்னோட டிரஸ் ஒன்னுமே பொசுங்களையே.. எனக்கு இது நல்ல சகுனம்.. உங்களுக்கு தான் கெட்ட சகுனம்..இந்த வியாக்கானம் எல்லாம் பேசு.. ஏதோ உண்மையான காதல்னா கூட பரவால.. நீ இப்படி ப்ரொபோஸ் பண்ண போறது இது பதினெட்டாவது தடவை.."
"ஏன் பதினெட்டாவது தடவை ப்ரொபோஸ் செஞ்சா உண்மை காதல் இல்லையா ?"
"பாரு பாரு.. ஒரே பொண்ணுக்கு பதினெட்டு தடவை ப்ரொபோஸ் செஞ்சா மாதிரி பேசறான்.."
"டேய்.. இது முன்னாடி மாதிரி இல்ல டா.. அப்போ எதோ நான் சின்ன பையன்.. இப்போ அப்படி இல்ல டா.."
"ஏன் டா போன வாரம் தான் கடைசியா ப்ரொபோஸ் செஞ்ச.. அதுக்குள்ள வளந்துட்டியா?"
"மச்சி கடைசியா ப்ரொபோஸ் செஞ்சு ஒரு வாரம் ஆச்சா டா? பாரேன் நாட்கள் எவ்வளவு சீக்கிரமா போகுதுன்னு.."
"பாரேன் ஒரு வாரம் ஆனதுக்கு பீல் பண்ணறான்.."
"டேய் உன்னோட பனிரெண்டாவது காதலியோட அண்ணன் ரவி இவளோட கிளாஸ் மேட்.. பாத்துக்கோ.."
"டேய் நீ ஏன் டா அவன் காதலிகளோட டீடைல்ஸ் collect பண்ணற?"
"டேய் நீ வேற, இன்னொரு தாட்டி இப்படி சொல்லாத.. அப்புறம் நம்ம சாஜகான் அவன் அழகான பொண்ணுங்கள தான் லவ் பண்ணறான்னு நினைப்பு வந்துரும். சீன் தாங்க முடியாது!!"
"டேய் காதல் அழக பாத்து வரது இல்ல டா!! மனச பாத்து வரது!!"
"மண்ணாங்கட்டி, பஸ் ஸ்டாப் ல இருந்து லுக் விட்டதுல எப்படி டா மனசு தெருஞ்சுது?"
"சரி உங்க கிட்ட பேசுனா இந்த லவ்வும் அவ்வளவு தான்!! நான் கிளம்பறேன்.. இவுனிங் பாக்கலாம்.."
"நீ உயிரோடா இருந்தா பாக்கலாம் டா.. அந்த பொண்ணோட அண்ணன் போலீஸ்.."
"நிஜமாவா சொல்லற ?" ஷூ போட்டு கொண்டிருந்த விவேக் ஷாக் ஆகி அருகில் வந்து கேட்டான்..
"ம்ம்"
"இத்தன நேரம் சொல்லவே இல்ல?"
"இவரு பெரிய பப்ளிக் பரோஸ் பிராசிகியூட்டர்.. குறுக்கு விசாரணை செய்யறார்.."
"நிஜம்டா.. நம்பு.."
"சரி டா.. நான் ப்ரொபோஸ் பண்ணறேன்.. ஒகே ஆச்சுனா இந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க.. இல்லைனா அந்த மாமியார் வீட்டுல வந்து பாருங்க.."
"மாமியார் வீடு எல்லாம் வேண்டாம் டா.. டைரெக்ட்டா மார்ச்சுவரி வரட்டா?"
"ஏன் டா.. உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா??"
"நல்ல காதலுக்கு தான் டா நல்ல வார்த்த, நொள்ள காதலுக்கு இது போதும் போ!!"
(காரி உமிழ்ந்து பிரகாஷ் நெற்றியில் திலகமிடவது போல் செய்கை செய்து சொன்னான் ரமேஷ்!!)
"ஆல் த பெஸ்ட் டா!!"
**********போய் ஒரு ரெண்டு மணி நேரத்தில் திரும்பி வாந்தான் பிரகாஷ்.. முகத்தில் புன்னகையுடன்..
அவன் இவ்வளவு இளித்து நண்பர்கள் பாத்ததே இல்லை.. என்ன நடந்தது என்று எவ்வளவு கேட்டும் சொல்லவே இல்லை.. "டேய் நீயா இவ்வளவு அமைதியாய் இருக்க?" என்று கேட்டும் கூட பதில் சொல்லவே இல்ல.. மெலிதாய் ஒரு புன்னைகை மட்டும் உதிர்த்தான்.. அந்த புன்னகை அவன் சந்தோசத்தை நண்பர்களுக்கு உணர்த்தியது.. காதல் மௌனமும் கத்துக்கொடுக்கும் போல..(எங்க போறீங்க, கத முடியல முழுசா படியுங்க!!)
"ஏன் டா, காதல் செஞ்சா இப்படி ஆஃப் ஆகிடுவாங்களா?" "நமக்கு என்ன அத பத்தி தெரியும்?"
அடுத்த நாள்...ஆள் நடமாடும் சத்தம் கேட்டு எழுந்த விவேக், பிரகாஷ் -ஐ பார்த்து அதிர்ந்தான்.. அதிர்ச்சியுடன் ரமேஷை எழுப்பினான்.. ரமேஷும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்..
காலை ஆறு மணிக்கு பிரகாஷ் குளித்துவிட்டு, நீட்டாக அயன் செய்த டிரஸ் போட்டுகொண்டு.. பல் தேய்த்து கொண்டிருந்தான்!
பிரகாஷ் அதிர்ந்ததுக்கு கூடுதல் காரணம் அவன் புது சட்டை பொசுங்கி கிடந்தது.. முதலில் ரமேஷ் சுதாரித்து, "என்ன டா பண்ணற?"
"இல்ல டா, நேத்திக்கு நான் போகும்போது வித்யாவை பார்த்தேன் டா, ஒரு பிச்சகாரனுக்கு காசு போட்டா.."
"அதனால இன்னிக்கு நீ போய் பிச்சை எடுக்க போறியா?""ஏண்டா இப்படி வினோதமா ஏதேதோ செய்யரனு கேட்டா, எதேதோ சொல்லற?" "முழுசா கேளுங்கடா, பஸ் ஸ்டாண்ட் பக்கதுல இருக்குற பிள்ளையார் கோயில் வாசல் பிச்சகாரங்களுக்கு பிச்சை போட்டு, உள்ளே போனா.. நானும் பின்னாடியே போன்னேன்.. அவ சாமிய சுத்திவரதுகுள்ள குருக்கள் உள்ளே போய்ட்டார்.. அவ வந்து கூப்டும் அவரு வரல.. அவ கண்ண மூடி சாமி கும்பிடும்போது பக்கத்துல போய், அவளுக்கு குங்குமம் வெச்சேன்.. அவ கண்ண தொறந்து என்ன பாத்தா.. நான் அவள பாத்தேன்.. ரெண்டு பேர் மூஞ்சியும் கிட்டத்துல.. நான் அவ கண்ண பாத்தேன்.. அவ ஏன் கண்ண பாத்தா.. நான் மெதுவா ஐ லவ் யு னு சொன்னேன்.. அப்போ தான் டா அவ மனசுல இருக்கறத எந்த தயக்கமும் இல்லாம சொன்னா.." "என்னடா சொன்னா? ஓகே சொல்லிடாளா?""கோயிலுக்கு வரதும் தப்பு இல்ல, ப்ரொபோஸ் செய்யறதும் தப்பு இல்ல.. ஆனா இது எல்லாம் பல்ல தேய்ச்சுட்டு வந்து பண்ணுங்கன்னு சொன்னா டா..
பாரேன் நேத்திக்கு நிறைய தடவ குளுசேன், ஆனா பல்லு வெளக்க மறந்துட்டேன்.. Bad Luck டா.. நீங்களும் ப்ரொபோஸ் செய்யறதுக்கு முன்னாடி பல்லு தேய்ச்சுட்டு போங்க டா!!"
Tuesday, April 14, 2009
''எழுக! இளைஞர் சக்தி!'
Junior Vikatan 19/04/2009 issue article for your view,
'இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலத் தைத் தீர்மானிக்கப் போகிறார்கள்...' -- அரசியல்வாதிகள் அடிக்கடி உதிர்க்கிற ஒரு பஞ்ச் டயலாக் இது! என்னதான் அரசியல் தலைவர்கள் ஆசை காட்டினாலும், இளைஞர்கள் அரசியலை நோக்கி வருவது பெருமளவில் குறைந்துவிட்டது என்பதே உண்மை. இன்றைய இளைஞர்களுக்கு அரசியலை விடவும், தங்களுடைய எதிர்காலத்தின் மீதுதான் அதிக அக்கறை. அதனால்தான் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் சுமார் 24 சதவிகிதம் இளைஞர்கள்-- அதாவது, சுமார் 18 கோடி வாக்காளர்கள் இளைஞர்கள். அவர்கள் பெரும்பாலும் எந்தக் கட்சியையும் சாராதவர்களாக இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். இவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இவர்களுடைய வாக்குகளை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு கட்சியும் புதியபுதிய டெக்னிக்குகளைக் கையாண்டு வருகின்றன. அதில் ஒன்று இணையம். எல்.கே.அத்வானி முதல் நம்முடைய உள்ளூர் அரசியல் தலைவர்கள் வரை இன்று பலரும் இணை யத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை வசீகரிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் ஏதேதோ வாக்குறுதிகளை அளித்த போதிலும், இளைஞர்கள் அவர்களை நோக்கிப் போகாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான இந்திய சுதந்திரம் இளைஞர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அதிகரிக்கவே உதவியிருக்கிறது. நம்மு டைய நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்களும், தாம் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத காரணத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவை நல்ல கல்வி, கௌரவமான சம்பளத்துடன் கூடிய
வேலைவாய்ப்பு. இதை நம்முடைய ஆட்சியாளர்கள் உருவாக்கித் தருவார்கள் என்ற நம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்குக் கொஞ்சமும் கிடையாது.
நம் நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு போய் விடக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் அக்கறை காட்டவில்லை. உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்தியப் பொருளாதாரமும் ஆட்டம் கண்டிருக்கிறது. இதனால் பெருமளவிலான வேலை இழப்புகளை நம் நாடு சந்தித்து வருகிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே அலைந்து கொண்டிருக்கும் நிலையில், இருக்கிற வேலையும் பறிபோய்விடும் என்கிற அச்சுறுத்தல் வேறு இப்போது அதிகரித்திருக் கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கிய தகவல் தொழில் நுட்பத் துறை, இன்று கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்தத் துறை யில் வேலை பார்த்துவந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், வேலையை இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 75,000 பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையை இழக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. ஐ.டி. துறை, அது சார்ந்த பி.பி.ஓ. துறை ஆகியவற்றில்தான் இத்தகைய வேலை இழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும்போதே பெரியபெரிய ஐ.டி. நிறுவனங்கள் நேரடியாக வந்து கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்தி, தமக்கான ஆட்களை தேர்வு செய்துகொண்டு போன நிலை... இப்போது இல்லை. கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக்கூட இன்னும் வேலைக்கான உத்தரவு வந்து சேர வில்லை. வேலை கிடைத்துப் போனவர்களும், சரியான பிராஜெக்ட் இல்லாததால் வெறுமனே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள். பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பிளஸ்-டூ படித்ததும் முன்னணிக் கல்லூரி களில் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நன்கொடை கொடுத்தாவது தம்முடைய பிள்ளைகளை சேர்த்து விட்டால், அவர்கள் படித்து முடித்தவுடன் கைநிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தம்முடைய பிள்ளைகளை கடன் வாங்கிக் கல்லூரிகளில் படிக்கவைத்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இன்றைய பொருளாதாரச் சூழல் கடுமையான அடியைத் தந்திருக்கிறது. கடந்த 2008 மார்ச் மாதம் வரை பெங்களூருவில் இருக்கும் ஐ.டி. துறையில் ஐந்தரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதில் கால்வாசிப் பேர் ஆண்டுக்கு ஐந்து லட்சத்துக்கும் குறையாமல் சம்பளம் வாங்கி வந்தார்கள். அவர்களெல்லாம் இன்று தம்முடைய வேலை நீடிக்குமா... நீடிக்காதா... என்று தெரியாமல் மனம் கலங்கி நிற்கிறார்கள்.
ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. துறைகளில் நேரடியாக ஒருவர் வேலை செய் தால் அவரையட்டி சுமார் ஆறு பேராவது வேலைவாய்ப்பைப் பெற்றுவந்தார்கள். இதன்படி பார்த்தால், இப்போது ஏற்படும் ஒவ்வொரு வேலை இழப்பும் மறைமுகமாக மேலும் ஆறு பேருடைய வேலை இழப்புக்கு இட்டுச்செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஐ.டி. துறையையட்டி வளர்ந்து வந்த பிற துறைகள், குறிப்பாக ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் முதலான துறைகள் இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இது ஒரு விஷச்சுழலைப் போல இந்தியப் பொருளாதாரத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய மோசமான சூழலில்தான் இந்திய நாடாளு மன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இளைஞர்களிடம் சென்று 'இந்தத் தேர்தலில் உங்களுடைய பிரச்னையாக எதை முன்வைப்பீர்கள்?' என்று கேட்டால், வேலைவாய்ப்பைத்தான் முதலில் சொல்வார்கள். நல்ல கல்வி வேண்டும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கைச்சூழல் வேண்டும், நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும், ஊழலற்ற நிர்வாகம் வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பவைதான் இன்றைய இளைஞர்களின் முன்னுரிமைகளாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வழங்காத காரணத்தால்தான், இளைஞர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது.
இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்று இளைஞர்கள் எல்லோருமே ஒப்புக்கொள்கிறார்கள் என்ற போதிலும், அதை வழங்கக்கூடிய அரசியல் தலைமை இன்று இல்லை என்றும் அவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். அண்மையில் பி.பி.சி. நிறுவனம் இந்திய இளைஞர்கள் பங்குபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்தத் தேர்தல் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, பெரும்பாலான இளைஞர்கள் நம்முடைய பாதுகாப்புக் கொள்கை குறித்து அக்கறையோடு கருத்துகளைக் கூறினார்கள்.
''பாதுகாப்பு என்பது போலீஸ§ம், ராணுவமும் வழங்குகிற பாது காப்பு என்று மட்டும் அர்த்தமாகாது. பொருளாதாரப் பாதுகாப்பு மிக முக்கியமானது. அது வேலைப் பாதுகாப்போடு தொடர்பு கொண்டிருக்கிறது!'' என்று அவர்களில் சிலர் குறிப்பிட்டார்கள். இது முக்கியமான ஒரு கருத்தாகும்.
நம்முடைய அரசாங்கம் பாதுகாப்புக்கான செலவு என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஒதுக்கி வருகிறது. அந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கு தொகை இருந்தாலே... லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கௌரவமான வேலைவாய்ப்புகளை அளித்துவிட முடியும். ஆனால், நம்முடைய ஆட்சியாளர்கள் அதுபற்றி கவலைப்படுவதில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், பொருளாதாரப் பாதுகாப்புக்கும் இடையே உள்ள உறவை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
இந்தியாவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்தத் துறையில் தமிழகம் உருவாக்கியது. உலகப் புகழ்பெற்ற ஐ.டி. நிறுவனங்கள் பல தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்ததால், நம்முடைய இளைஞர்களுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. இதே சமயத்தில் இங்கே பெருகிவந்த பொறியியல் கல்லூரிகள் உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் நம்முடைய இளைஞர்கள் போட்டியிடுவதற்கு வழி அமைத்துத் தந்தன. ஆனால், இந்திய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தமிழக ஐ.டி. துறையிலும் எதிரொலித்து வருகிறது.
இன்று தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரசியல் கட்சிகள், தமிழக இளைஞர்கள் சந்தித்து வருகிற இந்த வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கலை எப்படித் தீர்க்கப்போகின்றன? இதற்கென குறிப்பான திட்டங்களை அவை உருவாக்கியுள்ளனவா? பொறியியல் கல்லூரிகள் ஏராளமாக இருக்கிற நிலையில், இங்கே படித்துப் பட்டம் பெறுகிற இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லவேண்டிய நிலை, ஏற்கெனவே இருந்து வந்தது. இப்படியான உள்நாட்டு குடிப்பெயர்வு காரணமாக, நம்முடைய மாநிலத்தின் மனிதவள ஆற்றலை நாம் இழந்து வந்தோம். அது மேலும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சூழலில், அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை நம்முடைய அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது!
நம்முடைய மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்களில் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் பேர்தான், வேலை பெறத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள் என்று ஏற்கெனவே சி.ஐ.ஐ. மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பொறியியல் கல்வியை சீர்படுத்தி, மாணவர்களின் தரத்தை அதிகரிக்கச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொறியியல் கல்வி இவ்வளவு மோசமாக இருப்பதற்கு, பொறியியல் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாததும் ஒரு முக்கியமான காரணமாகும். தற்போது ஐ.டி. துறையில் ஏற்பட்டுள்ள சரிவை ஒருவிதத்தில் சாதகமாக நாம் திருப்பிவிட முடியும். தகுதியான ஆசிரியர்களைப் பொறியியல் கல்லூரிகளுக்கு நியமிக்க இந்தச் சூழலை பயன்படுத்திக்கொள்ளலாம். நல்ல சம்பளம் வழங்க முன்வந்தால்... திறமையான இளைஞர்கள் ஆசிரியப் பணியை நோக்கி வருவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சுயநிதி பொறியியல் கல்லூரியினர் இதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களை நிர்ப்பந்தித்துத்தான் இதைச் செய்யவைக்க முடியும். அரசியல் கட்சிகள் நினைத்தால், இது சாத்தியம்தான்.
இளைஞர்கள் தமக்கான பிரச்னையை முன்வைத்து விவாதிப்பதற்குப் பொருத்தமான களம் எதுவும் தமிழகத்தில் இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. அப்படியான வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்களுடைய பிரச்னைகளை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. இந்த இடைவெளியை நிரப்புவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். அது போலவே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதுகுறித்த விழிப்பு உணர்வை பரவலான தளங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும். ஆனால், அப்படியான முயற்சி எதுவும் இதுவரை இங்கு நடைபெறவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
தமிழக இளைஞர்கள் தம்முடைய பிரச்னைகளை வெளியே சொல்லமுடியாமல் மனத்திலேயே போட்டுப் புழுங்கிக்கொண்டு தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கி நிற்பார்களேயானால், அது அவர்களுக்குத்தான் நட்டம். 'அரசியல் மோசம்... அரசியல்வாதிகளெல்லாம் மோசம்... எல்லா இடங்களிலும் ஊழல் நிறைந்து விட்டது...' என்று புலம்பிக்கொண்டிருப்பதால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. தமக்கான பிரச்னைகளை முன்னிறுத்தவும், அவற்றைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். 'இளைஞர்கள் எவரும் எங்களை அணுகவில்லை. எனவே, நாங்கள் என்ன செய்வது?' என்று சொல்லி அரசியல் கட்சிகள் தப்பித்துக்கொள்ள முடியாது. இளைஞர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை தராவிட்டால், இந்த அரசியல் கட்சிகள், இளைஞர்களின் ஆதரவை மட்டுமல்ல... மற்றவர்களின் ஆதரவையும்கூட பெறுவது சந்தேகம்தான்!
Thursday, April 9, 2009
பணநாயகம்... ஜனநாயகத்துக்கு சவால்!
தேர்தல் அறிக்கைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வெளியிட்டுவிட்டன. வேட்பாளர் பட்டியலும் பல கட்சிகளால் வெளியிடப்பட்டு விட்டன. இனிமேல் வாக்கு சேகரிக்கக் கிளம்ப வேண்டி யதுதான்.
கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், அவை அறிவித்திருக்கிற வேட்பாளர் பட்டியலையும் பார்க்கும்போது, அவற்றுக்கிடையே ஒரு முரண்பாடு இருப் பதை உணர முடிகிறது. தேர்தல் அறிக்கையில் பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் பேசி யிருக்கின்றன. தேசியக் கட்சிகளை எடுத்துக்கொண்டால், வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டு பாதுகாப்பு என்று ஏகப்பட்ட பிரச்னைகளை விவாதித்திருக்கின்றன. மாநிலக் கட்சிகளும்கூட தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்தில், பல்வேறு ஆழமான பிரச்னைகளை தேர்தல் அறிக்கை களில் வெளியிட்டு இருக்கின்றன. ஆனால், இந்தத் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பேசு வதற்கும், நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதங்களை திறமையாக முன்வைப்பதற்குமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால், அரசியல் கட்சிகள் வெளி யிட்டுள்ள வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால், அவர்களில் பலர் அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக் கையில் முன்வைத்துள்ள விஷயங்களைப் பற்றி எந்தளவுக்கு விவரம் அறிந்துள்ளனர் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஆக, தேர்தல் அறிக்கை என்பது வெற்று வாக்குறுதிதானோ என்ற ஐயம் வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.
வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, என்னென்ன விஷயங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதைப் பார்த்தாலே இதற்கான விடை நமக்குத் தெரியும். போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் நேர்காணல்களில் முக்கியமாக இடம்பெறுகின்ற கேள்வி, 'நீங்கள் எவ்வளவு கோடி செலவு செய்வீர்கள்?' என்பதுதான். ஒரு
window.google_render_ad();
நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிகபட்சமாக இருபத்தைந்து லட்ச ரூபாய்தான் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த போதிலும், பலகோடி ரூபாய்களை ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்கிறார் என்பது ஊரறிந்த ரகசியம்.
தேர்தல் செலவு என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்துகொண்டே போகிறது. முன்பெல்லாம் சட்ட மன்றத் தேர்தலுக்குத்தான் அதிகமாக செலவாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்படி செலவு செய்ய தேவையில்லை என்ற நிலை இருந்தது. இப்போது சிறிய கட்சிகள்கூட மத்திய அரசில் பங்குபெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், தேர்தலில் செய்யப்படும் செலவு பின்னாளில் ஈட்டப்போகும் வருமானத்துக்கான முதலீடாகக் கருதப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலும்கூட செலவு மிகுந்ததாக மாறிவிட்டது. மிக சாதாரணக் கணக்கின்படி தொகுதி ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் செல வாகும் என்றுதான் பொதுவான பேச்சு இருக்கிறது. ஆக, நம்முடைய 'ஜனநாயகம்' என்பது 'பணநாயகமாக' மாறிவிட்டது!
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு எத்தனையோ விதமான பற்றாக்குறைகள் ஏற்படும். இப்போது வேட்பாளர் பற்றாக்குறை இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் பலவும் அறிவித்து வருகின்ற வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும்போது,
நல்ல வேட்பாளர்கள் கிடைப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
நாடாளுமன்றம் என்பது கட்சிகள் தங்களுடைய பலத்தைக் காட்டுகிற இடமல்ல. அதுதான் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கிற அவையாகும். அங்குதான் நம்முடைய நாட்டின் அனைத்துக் கொள்கைகளையும் தீர்மானிக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. உள்நாட்டு, வெளியுறவு, பாதுகாப்பு தொடர்பான நிலைபாடுகளெல்லாம் அங்குதான் தீர்மானிக்கப்படுகின்றன.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அவைக்கு எப்படிப் பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் எந்தவொரு கவனமும் செலுத்துவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது. பல்வேறு விஷயங்களில் ஞானமும், அதுபற்றி விவாதிக்கக்கூடிய ஆற்றலும்கொண்ட பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம்தான் ஒரு கட்சி தன்னுடைய இருப்பை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த முடியும். வெறும் பலத்தால் எதையும் செய்துவிட முடியாது. அரசியல் அறிவோ, பல்வேறு விஷயங்கள் குறித்த அக்கறையோ இல்லாதவர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, அவர்கள் வெறுமனே கைத்தூக்கிகளாக மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு கட்சிக்கு எத்தகைய லாப-நஷ்டங்களை ஏற்படுத்துகிறது என்பதை விடவும், அத்தகைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிற மாநிலங்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பது மிகமிக அவசியமாகும்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்று நம்முடைய மாநிலம் சந்தித்து வருகின்ற பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பகிர்வு பிரச்னைகள்; மத்திய-மாநில உறவுகள் குறித்த சிக்கல்கள்; இனம் என்கின்ற விதத்தில் தமிழ் இனம் சந்தித்து வருகின்ற சிக்கல்கள் என ஏராளமான பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் நாடாளுமன்ற அவையில் எடுத்துவைத்து, இதற்கான தீர்வுகளைக் காணவேண்டிய கடமை இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்லப்போகும் எம்.பி-க்களுக்கு இருக் கிறது. அந்தக் கடமையை ஆற்றக்கூடிய தகுதியான நபர்களை அனுப்பினால் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்தை நாம் காப்பாற்ற முடியும்.
தமிழ்நாட்டின் நலன்களுக்காக வாதாடக்கூடிய தகுதி யான நபர்களைத் தேர்ந்தெடுப்பதே வாக்காளர்களின் பொறுப்புதான் என்றாலும், அதற்கான வாய்ப்பு அவர் களுக்கு வழங்கப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி. தம்முடைய தொகுதியில் நிறுத்தப்படுகிற வேட்பாளர்களில் இருந்துதான் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில் வாக்காளர்களின் தேர்வு மிகவும் வரையறுக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. எனவே, இதில் வாக்காளர்களை அதிகம் குறைசொல்ல முடியாது. வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் கவனமாக இருந்து, நல்ல வேட்பாளர்களை நிறுத்தாமல் போனால், வாக்காளர்கள் எதுவும் செய்வதற்கில்லை.
விவரமறிந்த, நாட்டின் மீது அக்கறைகொண்ட பலரும், அரசியல் என்றாலே ஒதுங்கிப் போகிற நிலைதான் இப்போது உள்ளது. இதற்குக் காரணம், அத்தகைய நபர்கள் இருந்து செயல்படக்கூடிய கட்சிகள் இல்லாமைதான். இப்படியான நபர்கள் சேர்ந்து செயல்படக்கூடிய வாய்ப்பை அரசியல் கட்சிகள் உருவாக்கித் தர தவறிவிட்டன என்பதே உண்மை. அப்படி தப்பித்தவறி எவரேனும் வந்தாலும்கூட, அவர்கள் இந்தக் கட்சிகளில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய நிலை இருப்பதில்லை. இதற்கு அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லாமல் போய்க்கொண்டிருப்பதே முக்கியமான காரணமாகப்படுகிறது.
ஒருவர் தன்னுடைய ஆற்றலை வெளிப் படுத்தி, ஒரு ஆளுமையாக பரிணமிப்பதற்கு ஏற்ற சூழல் எந்த அரசியல் கட்சியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் கட்சிகளில் நல்ல வேட்பாளருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள கோஷ்டிப் பூசல்கள் நிறைந்த அரசியல் சூழலில், நல்ல ஆளுமைகள் எந்தக் கட்சியிலும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படையான தகுதியாக ஒருவரிடம் உள்ள பணம்தான் கருதப்படுகிறது என்ற நிலையில், வேறு எந்தவித தகுதியையும் அவரிடம் எதிர்பார்ப்பது நியாயமல்ல. பணத்தை செலவு செய்து வெற்றி பெற்றுப்போகிற ஒரு வேட்பாளர், பணத்தைச் சம்பாதிப்பதில்தான் குறியாக இருப்பார். அவருக்கு மாநிலத்தின் நலனோ, இனத்தின் நலனோ இன்னும் சொல்லப்போனால், அவர் சார்ந்துள்ள கட்சியின் நலனோகூட முக்கியமாக இருக்காது. பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்கி வெற்றி பெற்றுப் போகிற ஒருவர், அதேபோல பணத்தால் வாங்கப்படக்கூடிய ஒரு பண்டமாகத்தான் இருப்பார். ஒருசில எம்.பி-க் களின் ஆதரவுகூட நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கக்கூடும் என்ற நிலையில், இப்படியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்குப் பயனளிக்கும் என்பதை அரசியல் கட்சிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதம் வந்தபோது, அதில் பெரும் பாலான மாநிலக் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிதாகும். கலந்துகொண்ட ஒன்றிரண்டு கட்சிகளும்கூட தம்முடைய கூட்டணி தலை மையின் நிலைப்பாட்டை வழிமொழிவதாகவே கருத்துத் தெரிவித்தன. இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், சுயமாக சிந்தித்து நல்லதொரு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு இதுபோன்ற விஷயங்களில் ஞானம் கொண்ட பிரதிநிதிகள் அவையில் இருக்கவேண்டும்.
இன்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகின்ற நிதிப் பகிர்வு குறைந்துகொண்டே போகிறது. அதுபற்றி மாநிலக் கட்சிகள் சார்பில் போகிற எம்.பி-க்கள் குரல் எழுப்புவதில்லை. தமிழ்நாட்டில் 'வாட்' வரி அமல்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களைக் குறித்துப் பேசக்கூடிய எம்.எல்.ஏ-க்கள் ஒருசிலர்தான் தமிழக சட்டப் பேரவையில் இருந் தார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் நிலை இதைவிட சிறந்ததாக இல்லை. தற்போதுள்ள பொருளாதாரச் சூழலை புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? பொருளாதார விஷயங்களில் பயிற்சி அற்றவர்கள் அவை யில் நிறைந்திருக்கும்போது, நிதிநிலை அறிக்கை மீது என்ன விவாதத்தை நடத்திட முடியும்?
நம்முடைய நாட்டின் வேளாண் துறை, சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால், வேளாண் துறையை சரிவில் இருந்து காப் பாற்றியாக வேண்டும். வேளாண் துறை சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து எவ்வளவு பேருக்கு ஆழமான புரிதல் இருக்கிறது? விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த அறிக்கையைப் புரிந்துகொள்ளக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இன்றைய நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்? அதுபோல இன்று மீனவ மக்களின் வாழ்க்கையையே சிக்கலுக்கு ஆளாக்கக்கூடிய 'கடற்கரையோர மேலாண்மை' திட்டத்தைப் பற்றிவிவாதித்து, மீனவர் களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு குரலெழுப் பக்கூடிய எம்.பி-க்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?
தகுதியான, மக்கள் நலனில் அக்கறைகொண்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அரசியல் கட்சிகளுக்கு ஏற்படப்போகும் நஷ்டத்தைவிடவும், ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டமே மிகவும் அதிகம். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு குறித்துக் கண்காணிக்கவும், கருத்துச் சொல்லவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, ஊடகங்களுக்கு இதில் அதிகம் பொறுப்பு இருக்கிறது. விழிப்பு உணர்வு கொண்ட சூழலை ஏற்படுத்துவதன் மூலமே இத்தகைய சீர்கேட்டைச் சரிப்படுத்த முடியும்.
'அவர்கள் கட்சி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது அவர்களுடைய உரிமை. இதில் நாம் தலையிட்டு எதுவும் செய்து விடமுடியாது' என்று நினைத்தால், அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் மக்கள்தான். ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறாமல் தடுப்பதற்கு விழிப்பு உணர்வு பெற்ற வாக்காளர்கள் முன்வர வேண்டும். தனி நபர்களாக இருந்து, இதை மாற்றிவிட முடியாது என்பது உண்மைதான். சமூக அக்கறைகொண்ட இயக்கங்களும், ஊடகங்களும் நினைத்தால் நிச்சயமாக இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். செய்வார்களா?
Sunday, April 5, 2009
எல்லாம் வடிவேலு சொல்லுற மாதிரி படிக்கவும்,
வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்..
நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."
ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"
கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."
ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."
ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."
விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."
வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"
தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"
சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"
அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"
மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"
மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"
லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."
பிரணாப் முகர்ஜி : "முடியல..."
திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."
சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"
கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."
ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"
விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"
மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"
Friday, April 3, 2009
இன்று ஒரு தகவல் - 1
ஒரு வேட்பாளர் குற்றைந்தது இருபது வாகனம் வரை வைத்து இருக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி உண்டு, தொகுதிக்கு குறைத்தது 5 வேட்பாளர்கள் 543 தொகுதிகளில் 30 நாள் பிரச்சாரம் செய்யும்போது குறைத்தது 50 லிட்டர் பெட்ரோல் ஒரு நாளைக்கு போட வேண்டும் என்று வைத்துக்கொண்டால் மொத்தம் 8,14,50,000 லிட்டர் பெட்ரோல் தேவை. ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் எனில் மொத்தம் 407 கோடி ரூபாய் இதற்க்கு மட்டுமே செலவு ஆகிறது. இது ஒரு அனுமானிக்கப்பட்ட கணக்கு மட்டுமே. நிஜமாக 800 கோடிக்கும் அதிகமாக செலவு செய்வார்கள்.
செலவை விடுங்கள், அவர்கள் சம்பாரித்த கருப்பு பணம் செலவு செய்கிறார்கள், ஆனால் இதன் மூலம் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸ்யிடு பற்றி நினைத்தால் பயமாக இருக்கிறது.
Euro-3 Standard படி ஒரு கார் 150g/km CO2 குறைத்து வெளிஇட்டால் மொத்தம் 1,22,17,50,000 ton CO2 இந்த பூமி வாயு மடலத்தில் கலக்க பூக்கிறது இன்னும் ஒரு மாதத்தில். இந்த லட்சணத்தில் நமது அரசின் "Go Green" பிரச்சாரம் வேறு. ஒரு நாள் கூட மக்கள் pirachanigalai பற்றி பேசாத MP தேர்தெடுக்க நாம் இன்னும் ஒரு மோசமான உலகை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். இது இல்லாமல் இப்போது நமது பெரிய அரசியல் தலைவர்கள் அனைவரும் Helicopter பயன் படுத்தும் அளவுக்கு பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்.
தேர்தல் நேரத்தில் ஊழல், வன்முறை ஆகியவை தலையெடுத்துவிடக் கூடாது என்று விழிப்போடு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது பாராட்டுக்கு உரியதுதான். ஜனநாயகம் மாசு படாமல் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு நம்முடைய சுற்றுச்சூழல் மாசு படாமல் காக்கவேண்டியதும் அவசியம். இதை namathu தேர்தல் ஆணையமும், நம்முடைய அரசியல் தலைவர்களும் கருத்தில் கொள்வார்களா?
இங்கே சிந்திப்பதற்கு நமக்கு ஏதும் நேரம் இருந்தால் சற்று சிந்தியுங்கள் நண்பர்களே.
Thursday, April 2, 2009
''கூட்டணி பேச்சு முறிந்தது!'' (ஒரு கற்பனை பேட்டி...)
சரத்குமார் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தொகுதிப் பங்கீட்டுக்காக நடத்திய பேச்சுவார்த்தை...
இல.கணேசன்: வாங்க, வாங்க... சரத்! என்ன தனியா வந்திருக்கீங்க? கூட கட்சி நிர்வாகிகள் வரலையா?
சரத்: ராதிகாதானே..? 'அரசி' ஷ¨ட்டிங் போயிருக்காங்க.
இல.கணேசன்: எங்க கட்சியில தொகுதிப் பங்கீட்டு விஷயமாப் பேச இருவர் கமிட்டி ஒண்ணை அமைச்சுருக்கோம். அதுல நானும் திருநாவுக்கரசரும் இருக்கோம்.
சரத் (மனசுக்குள்): எங்க கட்சியில இருக்குற ரெண்டு பேரும்தான் உங்களோட அடுத்தடுத்த கட்டமா பேசுவோம். அதுசரி... திருநாவுக்கரசர் எங்கேங்க..?இல.கணேசன்: அவரு வேற ஏதும் கட்சிகூடப் பேச முடியுமானு பார்க்கப் போயிருக்கார்!
சரத்: சரி, நேரா மேட்டருக்கு வருவோம்...
இல.கணேசன்: இருக்கிறது 40 தொகுதி. இதை எப்படி பிரிச்சுக்கறது?
சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துடுங்க. மீதி 38-ம் உங்க கட்சிக்கு!இல.கணேசன்: அய்... அய்! எங்களுக்கு 2 போதும். 38-ல் நீங்கதான் நிக்கணும்!
சரத்: அதெல்லாம் முடியாதுங்க. நீங்க பாட்டுக்கு ஸீட்டைக் கொடுத்துட்டுப் போயிடுவீங்க. அங்கே நிறுத்தறதுக்கு நாங்க எங்கே போய் ஆளைத் தேடுறது?இல.கணேசன்: (மெதுவாக) கரெக்டா, நாம் பேச வேண்டிய டயலாக்கை இவரு பேசறாரே... (உரக்க) அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ரெண்டு. மீதியெல்லாம் உங்களுக்குத்தான்!
சரத் (டென்ஷனாக): 'கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதிப் பங்கீட்டினால் முறிந்தது'னு பத்திரிகைக்காரங்களுக்குச் சொல்லிடுங்க. எங்களுக்குனு சுயமரியாதை இருக்குல்ல... யார் நாங்க எதிர்பார்க்கிற ஸீட் தர்றாங்களோ அவங்களோடதான் கூட்டணி! நான் வர்றேங்க!
Hai Friends
This my new blog and First Blog too.
In this i would like to add lot of latest discussions and third eye analysis, by me from others support.
Hope every one will provide a good support.
Thanks
Kathiravan
